வெள்ளி, 16 நவம்பர், 2018

ஆந்திராவை பார்க்கிறேன்

    ஆந்திராவில் வாழுகின்ற வாய்ப்பு கிடைத்தது. என்னோடு பணியாற்றிய பேராசிரியர் கல்ப லதா ரெட்டி மேடம், ஆந்திராவில் முதல்வர் பதவி கிடைத்ததால், எனக்கும் ஆந்திராவில் உள்ள , திருப்பதியில் பணி ஆற்ற கூடிய வாய்ப்பு கிட்டியது. கடந்த சில  மாதங்களாக திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பெண்கள் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் பணி
.
 முதலில் சொல்ல வேண்டுமானால் உணவு. மிகவும் தரமான, நல்ல சாப்பாடு திருப்பதியில் கிடைக்கிறது. நிறைய நேரங்களில் நினைத்து பார்க்கிறேன், இது ஒரு நல்ல சாப்பாடு என்று,.வேர்க்கடலை சட்னி மிகவும் நன்றாக இருக்கிறது.ஒரு கார சட்னி, அது ஆந்திராவின் பெருமை என்றே சொல்ல வேண்டும்,. எல்லா நாட்களிலும் கிடைக்கும்.

   ஏழுமலையான் வாழுகின்ற ஊர்., அதனுடைய உணர்வு எப்போதும் உண்டு. மலை அடி வாரத்தில் தான் கல்லூரி, மலையை பார்த்தாலே வெங்கடேசலாபதியை பார்த்த உணர்வு வரும். திருச்சானுர் சென்றால் , அம்மனை வணங்கி வரும்போது தமிழ் காதில் ஒலித்து கொண்டே இருக்கும். அவ்வளவு தமிழர்கள் வருகிறார்கள். தமிழில் , ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்தி வந்து கொண்டே இருக்கும். தமிழர்கள் கட்டிய கோயில், தமிழ் இன்றும் வாழ்கிறது. இங்கே. லட்டு வித்தியாசமாக, நன்றாக இருக்கும்.
 அலிபிரிக்கு போனால், திருமலைக்கு , மலையேறும் ஆரம்ப பாதையின் முதல் படிகள்ஆரம்பிப்பதை பார்க்கலாம் .  இங்கே இருந்து காளி கோயில் கோபுரம் பார்த்து வணங்க முடியும். மிக்க ரம்மியமான இடம் . பிரசாதம் எப்போதும் கிடைக்கும்.
 மலையில் வெங்கடேச பெருமாளை தொழும் வாய்ப்பு கிடைத்தது.தமிழர்களின் வரலாறு , இங்கே காணக்கிடைப்பதாகவே உணர்கிறேன்.

   மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்ட  ராயர் கோபுரம் 1400 களை குறிக்கிறது.தமிழர்கள் விஜயநகர மனனர்களால் ஆளப்பட்ட காலம் அது. சிறிது  உயரத்தில் மைசூரு கோபுரம் வருகிறது. விஜயநகர ஆட்சி கன்னட மற்றும் தெலுங்கு மக்களின் ஆட்சி தான். அந்த ஆட்சி 1565 இல் முடிவுக்கு வந்த பிறகு மைசூரு கன்னட அரசர்கள் பலத்தோடு  தொடர்ந்து ஆட்சி செய்து வந்தனர். இன்னும் தூரத்தில் தமிழ் ஆழ்வார்களின் சிலைகளை காணலாம். ஆழ்வார்கள் தமிழில்தான் பாடி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருமலை கோயிலில் ஒரு மண்டபத்தில்  1311 முதல் 1370 வரை , திருச்சி ஸ்ரீரங்கர் சிலை பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூசை செய்யப்பட்ட மண்டபம் என்று எழுதி இருக்கிறது.

   திருமலை வேங்கடவானின் சுற்றுப்புற சுவர்களில் முழுமையாக செதுக்கப்பட்டிருக்கும் தமிழ் எழுத்துக்கள் , சோழர்கள் கட்டிய கோயில் என்று உணர்த்தி கொண்டு இருக்கிறது.
 ஏழுமலையானின் தரிசனம் எளிதாக கிடைப்பதில்லை. ஆனால் சக்தியின் வடிவாக அவர் காட்சி  தருவது நம்மை உயர்ந்த நிலைக்கு அழைத்து செல்வதாக உணர முடிகிறது.அவனுடைய ஆசி தமிழர்களுக்கு எப்போதும் வேண்டும் என்றே உணர்கிறேன்.  மனமும் சொல்கிறது.

    மாணவிகள் பற்றி சொல்ல வேண்டுமென்றால், தரமான மாணவர்களாக இருக்கிறார்கள். மிகவும் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.நிறைய பேர் கிராமப்புற மாணவர்கள்தான் , ஆனால் மரியாதை செய்வதில் மிகவும் உயர்ந்தவர்கள். நாம் வகுப்புக்குள் செல்லும் போதே , வரவேற்பு மிகவும் உற்சாகமானதாக இருக்கும். கருப்பு இங்கே குறைவு, கலரான மாணவர்கள் அதிகம். பாசமான மாணவர்கள் மிகவும் அதிகம்..அழகானவர்கள் அதிகம் பேர் என்றே சொல்ல தோணுகிறது.ஆசிரியர்களிடம் வந்து வகுப்பில் புரியாத பாடத்தை , கேட்கும் ஆவலும் சுய நம்பிக்கையும் கொண்டவர்கள். என்னுடைய  ஆசிரிய வாழ்வில் நல்ல அனுபவம் என்றே சொல்வேன்.

 என்னோடு பணியாற்றும் சக ஆசிரியர்கள் பற்றி சொன்னால் , இந்த கல்லூரி ஒரு ரெட்டி சமூக பேராசியர் நடத்தும் கல்லூரி. எல்லா சாதி மக்களும் இங்கே  வேலை செய்வதை பார்க்க முடிகிறது. மிகவும் பாசமானவர்கள். குறிப்பாக அனைத்து  மக்களும் என்னிடம் அன்புடன் நடந்து கொள்வார்கள். கடவுளுடைய ஆசீவாதமாகவே இதை பார்க்கிறேன் . மிகவும் உதவி புரிபவர்களாகவே இருக்கிறார்கள்.

 உயர்வான சமுதாயம் இங்கே இருப்பதை பார்க்கிறேன். தமிழ் சமுதாயம் , நான் கண்ட வரையில் , நிறைய தூரம் வர வேண்டும் என்றே சொல்ல தோன்றுகிறது .
   

3 கருத்துகள்:

  1. மிகவும் அருமையான பதிவு கா.ரா. மண்ணைப் பற்றியும் அதன் மொழி, பக்தி, சுவை, வரலாறு, மக்கட் பண்புகள் குறித்தும் அழகாக குறிப்பிட்டுள்ளீர்கள்.
    திருமலையின் சக்தி நிலை பற்றிய உங்கள் புரிதல் உங்களின் நிலையை காட்டுகிறது.
    பக்தியோடு தங்களின் நன்றி அறிதலும் அருமையாக பதிந்துள்ளீர்கள்.
    மக்களோடு இணைந்து கல்விப் பணி செய்கிறீர்கள். வாழ்த்துக்கள். மேலும் மேலும் உயர்ந்து உன்னதம் அடைய திருமலை ஈசன் அருள் புரியட்டும்.
    வாழ்க வளமுடன்.
    Dr.A.Venkatesan. Ph.D.,

    பதிலளிநீக்கு