வெள்ளி, 21 ஜனவரி, 2022

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தி ஏழு.

 

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தி ஏழு.

தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஆண்டு. தமிழர்கள் விடுதலை பெற்று இருபது ஆண்டுகள் , இந்திய அரசியல் அதிகாரத்தில் உச்சம் தொட்ட காலகட்டம், சறுக்கிய வருடம் அது.

நான் நிறைய நேரம் நினைப்பதுண்டு - தமிழர்களுக்கு வரலாறு தெரியாது என்று. ஒரு சிலரே வரலாறு பற்றிய அறிவை பெற்று இருக்கிறார்கள். பெரியார் வெ ரா , வரலாறு அறிந்தவராக இருந்தார். அண்ணா மெத்த படித்தவராக இருந்தாலும், வரலாறு பற்றிய திடமான உணர்வு இல்லாதவராக இருந்தவராகவே , நான் பார்க்கிறேன். அவரை அறிஞ்சர் என்று போற்றுகிறார்கள். அவருக்கு உண்மையான வரலாறு உணர்வு இருந்திருந்தால் , அவர் ஒரு விடுதலை வீரராக வளர்ந்து இருப்பார் என்பதே, எனது எண்ணம்.

அறுநூறு ஆண்டுகள் தமிழர்கள் அடிமை பட்டு இருக்கிறார்கள் என்ற அறிவு வந்தவுடன் , எந்தவொரு தமிழரும் விடுதலை போரில் குதிப்பது உறுதி.அண்ணா அதை செய்யவில்லை.

பாண்டியர்கள் 1311 ஆம் ஆண்டு தோற்கடிக்க பட்ட பின்பு, தமிழ் நிலம் அந்நியர் வசம் வந்தது. முதலில் சில காலம் இஸ்லாமியர்கள் மதுரையை தலைமை இடமாக கொண்டு ஆட்சி செய்த பின்பு, மதுரை விஜய நகர ஆட்சியின் கீழ் வந்தது. அப்போது மதுரை, கன்னட மற்றும் தெலுங்கு தளபதிகளால் ஆளப்பட்டு வந்தது.பின்பு மீண்டும் இஸ்லாமியரின் ஆட்சி 17 ஆம் நூற்றாண்டில் உருவாக்க பட்டது. தஞ்சாவூர் பகுதி மராட்டியர் வசமானது.இடையில்  ஐரோப்பியர் சில இடங்களில் ஆதிக்கம் செலுத்தினர்.

1801ஆம் ஆண்டு தமிழகம் ஆங்கிலேயர் வசம் வந்தது. இப்படி அறுநூறு ஆண்டுகள் தமிழர்கள் அரசியல் அதிகாரம் இழந்தவராக இருந்தனர்.

ஆங்கிலேயர்கள் வந்தபின்புதான் தமிழ் நிலத்தின் வரலாற்று நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த கால கட்டத்தில் தமிழர்கள் சில தடவை , அரசியல் தலைமை பெற முயற்சி மேற்கொண்ட வரலாறு இருக்கிறது. ஆனால் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.என்பதுதான் உண்மை.

அதனால்தான் தமிழக விடுதலை போராட்ட காலம் , தமிழ் நிலத்தில் நடந்த இனிப்பான சம்பவமாக தெரிகிறது.

தமிழக விடுதலை போராட்டம் 1857 முதல் 1947 வரை  நடந்ததாக நான் பார்க்கிறேன்.ஏனென்றால் முந்தைய பாளையக்காரர்கள் செய்த போர் , ஒரு பாளையத்தை தான் உருவாக்கி இருக்க முடியுமே தவிர , மக்களுக்கு விடுதலை பெற்று தந்திருக்காது.

தமிழர்கள் இந்த அறுநூறு ஆண்டுகளில் அரசியல் தலைமை பதவியை அடைய முடியவில்லை.  1947 ஆம் ஆண்டு, நாடு விடுதலை பெற்றபோது, தமிழர்களும் விடுதலை பெற்றார்கள் என்பதுதான் உண்மை.

இங்கு ஒரு விஷயத்தை உணர வேண்டும் மைசூரு மக்கள்  விடுதலை பெற்றதும் தமிழர்கள் விடுதலை பெற்றதும் ஒரே நேரத்தில் தான். ஆனால் மைசூரு மக்கள் மற்றவர்களால் ஆளப்படவில்லை. ஆனால் தமிழர்கள் பிறமொழி பேசும் மக்களால் ஆளப்பட்டு வந்த நிலையை உற்று நோக்க வேண்டும்.

அவிநாசி செட்டியார் இந்திய அரசின் நிதி அமைச்சராக பதவி ஏற்றதும், சி சுப்பிரமணியம், பக்தவச்சலம் போன்றோர் பல வருடங்கள் நாட்டின் நிர்வாகத்தை பார்த்தார்கள் என்பது தமிழர்கள் அரசியல் அதிகாரம் பெற்றவர்களாக மாறியதை காட்டுகிறது. சுதந்திர போராட்ட வீரர் கக்கன் , தமிழக உள்துறை அமைச்சராக பதவி ஏற்றதும் தமிழ் சமூகம் பெற்ற அரசியல் அதிகாரத்தின் ஏற்றம் என்றே நினைக்கிறேன்.

பெருந்தலைவர் காமராஜர் 1954 ஆம் ஆண்டு, தமிழ் புத்தாண்டு அன்று தமிழக முதல்வராக பதவி ஏற்றது , தமிழர்கள் அரசியல் அதிகாரம் பெற்றதின் முழுமையான சான்று.

அவர் கல்வியை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு சென்றதும், தொழில்கள் வளரவும், விவசாயம் செழிக்கவும் , அவர் ஆற்றிய பணிகள் , இன்றும் அணைகளாகவும், தொழில்கூடங்களாகவும் காட்சி தருகிறது.

தமிழர்கள் மத்தியிலும் மாநிலத்திலும் , பெரும் பதவிகளை அடைந்த காலம்.அது.

அறுநூறு ஆண்டுகளில் தமிழர்கள் பெறாத தலைமையை , காமராஜர் கொடுத்தார் என்பதால் , அவருக்கு 1961 ஆம் ஆண்டு, அவர் முதல்வராக இருந்தபோது,சென்னையில் சிலை வைக்கப்பட்டது. அறுநூறு ஆண்டுகளுக்கு பிறகு , தமிழர்கள் அரசியல் அதிகாரம் பெற்றதின் பிரதிபலிப்பாகவே இதை பார்க்க முடிகிறது.

பின்பு இரண்டு பிரதமர்களை உருவாக்குவதில் தலைமை பங்கு வகித்து, டெல்லி அரசியல் அதிகார கூட்டத்தில் முதல் வரிசையில் மட்டுமல்லாது, அந்த வரிசையில் முதல் இடத்திலும் இருக்கும் வண்ணம் தம்மை உயர்த்தினார்.

டெல்லி அரசியலில் ,பெருந்தலைவர் தலைமை பதவியில் இருந்த போது, தமிழர்கள் டெல்லி அரசியலில் பல்வேறு துறைகளிலும் சிறப்பாக பணியாற்றிய நிகழ்வுகள் நடந்தது. சி சுப்பிரமணியம் மத்திய விவசாய அமைச்சராக, பசுமை புரட்சி செய்த காலம்.

1967 ஆம் ஆண்டு தேர்தலில் , இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் காமராஜர் தோற்கடிக்க பட்டார் என்பது, தமிழர்கள், தங்கள் தலை மேல், தாங்களே கல்லை போட்ட நிகழ்வாகவே கருதுகிறேன். தமிழர்களுக்கு விடுதலை வாங்கி தந்த தலைவர்கள் தோற்கடிக்க பட்டார்கள். எம் ஜி ஆரும்,எஸ் எஸ் ஆரும் வெற்றி பெற்றனர்.

அண்ணா 1969 ஆம் ஆண்டு மறைந்தது , தமிழ் நாட்டிற்கு விழுந்த அடுத்த அடி .

மத்திய அரசில், தமிழர்கள் செல்வாக்கை இழந்ததால் 1974 ஆம் ஆண்டு, கச்ச தீவை இலங்கைக்கு கொடுத்த போது தடுக்க கூடிய சக்தி அன்றைய தமிழக முதலமைச்சர் மு கருணாநிதிக்கு இருக்கவில்லை.1974 ஆம் ஆண்டு புதுப்பிக்க வேண்டிய காவேரி ஒப்பந்தமும் புதுப்பிக்கப்பட, முடியவில்லை.

திராவிட கட்சிகளின் தமிழ் இன எழுச்சி உணர்வு , இலங்கையில் பற்றி எரிந்தது. தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பெரும் பகையை உருவாக்கியது.

இன்றைய இலங்கையின் ஆளும் வர்க்கம் , தெலுங்கு நாயக்க வம்சத்தவர்கள் என்பதே உண்மை. மதுரை மநாயக்கர்கள் 17 ஆம் நூற்றாண்டின் கடைசியில் , அவர்களின் ஆட்சியின் கடைசி காலத்தில் , தமிழ் மற்றும் பிராமண படைத்தலைவர்கள்  துணையுடன் இலங்கைக்கு சென்று, புத்த மதத்தை தழுவினர். அனைவரும் சிங்களர்களாக மாறினர்.ஆதலால் இன்றைய சிங்கள அரசியல் தலைவர்களில் தமிழ் வம்சத்தவர்களும் இருக்கிறார்கள். தெலுங்கு மற்றும் பிராமண வம்சத்தவர்களும் சிங்களவர்களாக தோன்றுகிறார்கள்.

இந்த அரசியல் புரிதல் கூட இல்லாத திராவிட கட்சிகள் சிங்களவர்களை மூர்க்கத்தனமாக எதிர்த்தனர். விளைவு தமிழர்கள் ஒரு தலைமுறையை இழந்தோம். சொல்லொண்ணா  துயர் அடைந்தோம் என்பதுதான் உண்மை.

திராவிட கட்சிகளின் அரசியல் தமிழ் நாட்டுக்கு மட்டும் உட்பட்டதாக இருப்பதால் 2014 ஆம் ஆண்டு முதல் மத்தியில் மந்திரி பதவி பெரும், அரசியல் அதிகாரத்தை, தமிழகம் இழந்து நிற்கிறது.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழ் நாட்டின் முதல்வர்களாக, தெலுங்கு, கன்னட, மலையாள வம்சத்தவர்கள்  அதிகாரம் பெற்றவர்களாக விளங்கினார்கள்.

சிறிது காலம் தமிழர்கள் பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி விளங்கினார்கள்.

இன்றைய தமிழக முதல்வர் மு ஸ்டாலின் தெலுங்கு வம்சத்தை சார்நதவர்தான்.

அறுநூறு ஆண்டுகள் வருத்திய அடிமை தழையை வீழ்த்தி , விடுதலை பெற்ற தமிழர்கள்,  தமிழ் நாட்டு அரசின் முதன்மை அமைச்சராக, தமிழர் வர கூடிய  அரசியல் அதிகாரம் பெற வேண்டும். அதர்க்காக ஜனநாயக முறையில் அணைத்து தமிழர்களும் உழைக்க வேண்டும்.என்பதே எனது விருப்பம்.,