புதன், 4 ஜனவரி, 2023

திருப்பதி கபில தீர்த்தம் சிவன் கோவில் காமாட்சி அம்மன் தெப்ப திருவிழா

 உலக நாயகி காமாட்சி அம்மன் தெப்ப திருவிழா காணும் பேறு பெற்றேன்.திருப்பதி கபில தீர்த்தம் சிவன் கோவிலில் 4/1/2023 அன்று மாலை 7 மணிக்கு , அம்மன் தெப்ப திருவிழா நாலாவது நாளாக நடைபெற்றது. அருவி தண்ணீர் விழும் அழகு சிறப்பாக இருந்தது.. இந்த சிவன் கோவில் ராஜேந்திர சோழன் கட்டியதாக வரலாறு சொல்லுகிறது.

அப்படிப்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்த கோவிலில்,அருவி தண்ணீர் சத்தத்தின் பின்னணியில், நடைபெற்ற  இந்த தெப்ப திருவிழாவில் காமாட்சி அம்மன் , தெப்பத்தில்  வண்ண விளக்குகளுடன்,மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு குளத்தில் சுத்தி வந்த போது  ஆனந்த காட்சியாக அமைந்தது.

இந்த அற்புத  காட்சியை சில மந்திகளும் கண்டுகளித்தனர். மந்திகள் மலையின் பாறை பொந்துகளில் அமர்ந்து இருந்த காட்சி மகிழ்ச்சியை அளித்தது. சந்திரன் முழு நிலவாக ஜொலித்தது, அவரும் இந்த நிகழ்ச்கியை பார்க்க வந்தது போல தோன்றியது. மந்திகளில் ஒரு மந்தி இன்னொரு இணை மந்தியை அணைக்க முயற்சித்த போது, அந்த மந்தி கையை தட்டி, தவிர்த்தது, அம்மன் பவனி வரும் தெய்வ நிகழ்ச்சியை, மந்தியும் மகிழ்ந்து பக்தியுடன்  வணங்கியதாக உணர்ந்தேன்.

திருப்பதியின் பெருமைகளில் இந்த கபில தீர்த்தம் தெப்ப திருவிழாவும் ஒன்றாக உணர்ந்தேன்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக