வியாழன், 26 ஜனவரி, 2023

Chola dynasty's last king in 1600s (சோழ பரம்பரையின் கடைசி வாரிசு மன்னர் )

 சோழ பரம்பரையின் கடைசி வாரிசு மன்னர் 

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு தோற்கடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கடைசி சோழன் சோழகோன்

ஆயிரத்து அறுநூற்று இருபதுகளில், தஞ்சையை ஆண்ட தெலுங்கு நாயக்க  மன்னர் ரகுநாத நாயக்கரால், கடைசி சோழ அரச பரம்பரையின் கடைசி குறுநில மன்னன்  சோழகோன், தோற்கடிக்க பட்டு சிறையில் அடைக்கப்பட்ட வரலாறு தெரிய வருகிறது.

மன்னர் ரகுநாத நாயக்கரின் வரலாற்றை பற்றிப்பேசும் ரகுநாதப்யுதயம் (Raghunathabhyudayam) என்ற நூலில் சோழகோன் பற்றி தெரிவிக்கபடுகிறது. இந்த நூல்  சமஸ்கிரதத்தில் ரகுநாத நாயக்கரின் மனைவி ராமபத்ராமாவால் எழுத பட்டது    

கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கும் இடத்தில், அமைந்திருக்கும் ஒரு சிறு தீவில் கோட்டை கட்டி, தஞ்சையை இழந்த பிற்கால சோழர்கள் வாழ்ந்து வந்தனர். 1600 களில்  சிதம்பரம் பக்கத்தில் பிச்சாவரம் வன பகுதியை தலைமை  இடமாக கொண்டு சோழகோன் சிறு பகுதியை ஆண்டு  வந்தார்.

இந்த போரில், ரகுநாத நாயக்கர்  பீரங்கிகளை பயன்படுத்தி சோழகனை தோற்கடித்தது தெரிகிறது. இதற்காக்க அவர் டென்மார்க் மற்றும் டச்சு மாலிமிகளிடம் பீரங்கிகளை வாங்கினார். ஐரோப்பிரர்களும் இந்த போரில் ஈடு பட்டது தெரிய வருகிறது. நெதர்லாந்தில் உள்ள லீடன் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் பொக்கிஷமாக இருக்கும் ராஜேந்திர சோழனுடைய 30 கிலோ எடையுள்ள வெண்கல செப்பேடுகள் இதற்கு சாட்சி. இந்த போரில் ஈடுபட்ட டச்சு மாலுமிகள் இதை எடுத்து சென்றிருக்க வேண்டும்.

இந்த கடைசி சோழ மன்னர் தோற்கடிக்க பட்டத்தை இந்த  ரகுநாதப்யுதயம் நூல் கீழ்வருவாரு கூறுகிறது.

அவரது தளபதிகள் அனைவருக்கும் தயாராக இருக்கும்படி கட்டளையிட்டார், மற்றும் அவர் இல்லாத நேரத்தில் தலைநகரை நிர்வகிக்க சரியான அதிகாரிகளை நியமித்தார்,

ரகுநாத நாயக்கர் தனது படையுடன் காவேரிக் கரை வழியாக கும்பகோணத்திற்குப் புறப்பட்டார். அந்த இடத்து தெய்வங்களை வணங்கி ஊர்வலம் சென்றார்

கடற்கரையில் உள்ள சோழகோன் தீவை நோக்கி. ரகுநாத நாயக்கரின் மாபெரும் படை சென்றது..

சோழகோன் சரணடையாமல் போரிட்டார். ரகுநாத நாயக்கர்  தனது ஆட்களுக்கு படகுகளின் பாலம் அமைக்க உத்தரவிட்டார், மேலும் அவர் யானை மீது ஆற்றைக் கடந்து தீவுக்குச் சென்றார்.

பின்னர் அவர்கள் சோழகோனின் கோட்டையை முற்றுகையிடத் தொடங்கினர்.

ஆனால் அதற்குள் இருந்த பாதுகாப்பு அரண் ரகுநாத நாயக்கரின் படையின் மீது கற்களையும் நெருப்பையும் பொழிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

ரகுநாத நாயக்கர்  மிகுந்த கோபத்துடன் கோட்டைகளை அழிக்க அல்லது ஏணிகளுடன் கோட்டைக்குள் நுழையுமாறு தனது படைக்கு உத்தரவிட்டார்.

கோட்டை முற்றுகையிட்டவர்களின் கைகளில் விழுந்தபோது, ​​சோலகோன் தப்பிக்க முயன்றார், ஆனால் அவர் சிறை பிடிக்கப்பட்டார். ரகுநாத நாயக்கர்  சோழகோனின் உயிரைக் காப்பாற்ற உத்தரவிட்டார்.

சோழகோனுக்கு எந்தக் கரிசனையும் காட்ட வேண்டாம் என்றும் , அவரைச் சிறையில் தள்ளுமாறும் அமைச்சர்கள் அறிவுறுத்தியதையடுத்து , ரகுநாதர் அதன்படி உத்தரவிட்டார்.

இவ்வாறு  சோழ பரம்பரையின் கடைசி குறுநில மன்னரும் அவரது குடும்பத்தாரும் தஞ்சை சிறையில் அடைக்கப்பட்டனர்.


References:

1. krishnaswamy Iyankar "Sources of Vijaya Nagar history" (the forgotten books). published by the      university of madras ,1919.

2.Esther Fihl and A.R. Venkatachalapathy  "review of development and change" ,special issue- Indo-     Danish Cultural Encounters in Tranquebar: Past and Present,2009.

3. https://www.youtube.com/watch?v=1aEsFOIh9Xs

 

 

 

 

 

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக