சனி, 3 அக்டோபர், 2020

ஸ்ரீ லங்காவில் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் , நம்மவர்களே!

 ஸ்ரீ லங்காவின் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் , நம்மவர்களே  என்று சொல்கிறேன். ஆனால் பலர் அவர்கள் நம்மவர்கள் இல்லை , அவர்கள் வங்காளத்தில் இருந்து வந்தவர்கள் என்று சொல்கிறார்கள் .  தமிழர்களுக்கு தங்கள் வரலாறு தெரியாது என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு. அதனால்தான் தமிழர் வரலாறு பற்றி  எழுதி வருகிறேன் . வங்காளத்தில் இருந்து வந்தவர்கள் பாண்டிய நாட்டு தமிழ் பெண்களை மணந்தார்கள், ஆனாலும் சிங்களவர்கள் தனி இனமாகவே வாழ்ந்தனர்.

நான் சொல்வது  இன்றைய தினம், சிங்கள அரசியலில்  அதிகாரம்  செலுத்துபவர்கள் , நம்மவர்களே என்பதுதான்.

எப்படி என்பதை இப்போது சொல்கிறேன். மதுரை தெலுங்கு நாயக்கர்கள் சிங்கள மன்னர்களுடன் மண உறவு வைத்திருந்தனர். மதுரையில் நாயக்கர்கள் ஆட்சியை முகலாய அதிகாரிகளிடம்  இழந்தபோது , நாயக்க ஆட்சியாளர்கள், தமிழ் மற்றும் பிராமண அதிகாரிகளுடன் , தங்கள் சகோதரி அதிகாரத்தில் இருக்கும் கண்டிக்கு , 17 ஆம்  நூற்றாண்டு  இறுதியில்  சென்றனர். அங்கு தங்கைக்கு குழந்தை இல்லாததால் , தெலுங்கு நாயக்க சகோதரனே ஆட்சியை பெறுகிறான். தங்களை புத்த மதத்திற்கு மாற்றி , சிங்களவர்களாக மாறுகிறார்கள்.

அதன் முதல் கண்டியில் தெலுங்கு நாயக்க ஆட்சி ஆரம்பம் ஆகிறது.  அதன் பிறகு ஆங்கிலேயரிடம் அதிகாரத்தை  இழந்த இவர்கள் , சுதந்திரத்திற்கு பிறகு  மீண்டும்  அரசியல் அதிகாரத்தை பெறுகிறார்கள், தமிழர்களுக்கு சம உரிமை மறுக்கிறார்கள்.

அதனால்தான், பண்டார நாயக்கே (தெலுங்கு) , அதுலத் முதலி (தமிழ்) மற்றும் பிராமண சிங்களவர்கள் அதிகாரத்தில் இருந்தார்கள், இப்போதும் இருக்கிறார்கள். 

இப்போது சொல்லுங்கள், வைகோவும் (தெலுங்கு), கருணாநிதியும் (தெலுங்கு) நம்மவர்கள் என்னும் போது , இன்றைய ராஜ பக்சேயும்  நம்மவர்கள்தானே . ( இவர்கள் துண்டு போடும் முறையை பாருங்கள் ) ஒரே மாதிரி இருக்கும். தெலுங்கு சாயல் தெரியும்.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

தமிழ்நாட்டு விடுதலை போரில் காமராஜர்

                                     Chronicle Times: Perunthalaivar Kamarajar History (1934-1945)

                                             With Mentor Sathyamurthy S , Kamarajar K

 அறுநூறு ஆண்டுகள் அடிமைப்பட்டு ,

 தாழ் பட்டு நின்ற தமிழ் நாட்டு சமூகத்திற்கு 

உரிமை வேண்டி , உழைத்த 

 பாரதி , வ ஊ சி,  சுப்பிரமணிய சிவா, 

 ராஜாஜி ,  முத்துரங்க முதலியார் , முத்துராம லிங்க தேவர்  , சத்தியமூர்த்தி வழி நின்ற  தியாக தலைமுறையின் தலைவர் காமராஜர்!

 அதனால்தான் நீர்  பெருந்தலைவர் !


28 ஆண்டுகள் விடுதலை போரில் ஈடுபட்டு ,

எட்டு ஆண்டுகள் தலைமை ஏற்று ,

கடைசி கட்ட விடுதலை  போரை வழிநடத்தி,

எட்டு ஆண்டுகள் சிறை பட்டு , 

உரிமைகள் என்ற பதக்கத்தை பெற்று தந்து ,

புகழாக , பெருமையாக , தன்னையே செதுக்கிய தலைவரே !

காமராஜரே !


உன் பெயர் சொல்வதால் பெருமை அடைகிறது தமிழ் நாட்டு சமூகம்!

வாழ்க உன் தலைமுறையின் புகழ்.

 வாழ்க இந்திய விடுதலை வீரர்களின் புகழ்.

ஜெய் ஹிந்த் . 

சனி, 8 ஆகஸ்ட், 2020

வெள்ளையனே வெளியேறு - ஆகஸ்ட் 8 போராட்டமும் - காமராஜரும்.

 உரிமை வேண்டி நடந்த , இந்திய விடுதலை போராட்டங்களில் இரண்டு போராட்டங்கள் மிகவும் முக்கியமானவை. ஓன்று  1930 உப்பு சத்தியாகிரக போராட்டம் , மற்றொன்று 1942 வெள்ளையனே வெளியேறு - ஆகஸ்ட் 8 போராட்டம் .
 உப்பு சத்யாகிரகத்திற்கு ,தமிழ் நாட்டு சமூகத்திற்கு தலைமை ஏற்று நடத்திய தலைவர் ராஜாஜி. ஆகஸ்ட் 8 போராட்டத்திற்கு ,தமிழ் நாட்டு சமூகத்திற்கு தலைமை ஏற்று நடத்தியவர் காமராஜர்.


காமராஜர் , உப்பு சத்தியாகிரக போராட்டத்தில்  , தொண்டராக கலந்து கொண்டு , இரண்டு ஆண்டு சிறை தண்டனை அடைந்தார். 
தமிழ் நாடு காங்கிரஸ் தலைவராக , ஆகஸ்ட் 8 போராட்டத்தை , தலைமை ஏற்று நடத்தி , மூன்றரை ஆண்டுகள் சிறையில் அடைக்க பட்டார். அந்த காலத்தில் அவர் , சிறையில் கல்லுடைக்கும் பணியை செய்தார். 


அப்படி தமிழ் நாட்டு சமூகத்தை , விடுதலை போரில் வழி  நடத்திய தலைவர் காமராஜர் , பிற்காலத்தில், தமிழ்நாட்டு முதல்வராக வழிநடத்திய காலத்தில் , முதியோர் பென்ஷனை அறிமுகப்படுத்தி, இலவச கல்வியை அறிமுக படுத்தி, மதிய உணவு திட்டத்தை பள்ளி கூடங்களில் அறிமுகபடுத்தி , வழி நடத்தினார். 
தொழில் கூடங்களை பெருக்கி ( திருச்சி பெல் ), அணை கட்டுகளை உருவாக்கி (ஆழியார் அணைக்கட்டு ), பள்ளி கூடங்களை உருவாக்கி ( ஐ ஐ டி , மெட்ராஸ் ) , தமிழ் நாட்டு சமுகத்தை , வளர்ச்சி பாதையில் வழி  நடத்தினார்.


ஆகஸ்ட் 8 , வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கெடுத்த அத்தனை விடுதலை வீரர்களையும் நினைத்து , அவர்கள் வழியில் விடுதலை காப்போம்.  அந்த போராட்டத்தின் தலைமை ஏற்று நடத்திய காமராஜர்  வழி  நடப்போம் , பாரதம் காப்போம், வெற்றி பெறுவோம். வளம் பெறுவோம்.  ஜெய் ஹிந்த். 

செவ்வாய், 14 ஜூலை, 2020

உன் பெயர் காமராஜ்

தமிழ் சமூகத்தின் உயர்வின் அடையாளம் காமராஜ்.

                              kamarajar,nehru,indra | Indian history, Indira gandhi, National heroes

உனக்கென்று சொத்து சேர்க்காத தலைவா ! நீவீர்
ஊருக்கென்று சேர்த்த சொத்துக்களில் சில !
திருச்சி பெல், நெய்வேலி நிலக்கரி சுரங்கம்,
திருநெல்வேலி தொழில் பேட்டை, பெரம்பூர் ஐ சி  எப்
ஆவடி டாங்க் , கிண்டி  தொழில் பேட்டை
குந்தா மின் நிலையம் , மேட்டூர் நீர்மின் நிலையம் ,
அம்பத்தூர் தொழில் பேட்டை, தூத்துக்குடி துறைமுகம்
அமராவதி அணைக்கட்டு, ஆரணி ஆறு அணைக்கட்டு
, ஆழியாறு அணைக்கட்டு , வைகை அணைக்கட்டு ,
மணிமுத்தாறு அணைக்கட்டு , கிருஷ்ணகிரி அணைக்கட்டு ,
திருநெல்வேலி மருத்துவ கல்லூரி , தஞ்சை மருத்துவ கல்லூரி , மெட்ராஸ்  ஐ ஐ டி , சென்னை சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி, இன்னும் பல . இது ஒன்பது ஆண்டுகளில்  உருவாக்கப்பட்டவைகள்.
இருபத்து  எட்டு ஆண்டுகள் விடுதலை போரில் பங்கேற்பு , அதில்
எட்டு ஆண்டுகள் விடுதலை போரை வழி  நடத்திய
பெருந்தமிழரே !
 நேருவுக்கு பின் யார் என்ற கேவிக்கு இரு முறை பதில் தந்த பெருந்தலைவா ! காமராஜ் என்ற தமிழ் சமூகத்தின்  பெருமையே ! செல்வமே!
இன்று உனது பிறந்த நாள்! தமிழர்களின் எழுச்சி நாள்!கல்வியின்  வளர்ச்சி நாள் !
உனது வழி , பாரதத்தின்  ஒற்றுமையின் வழி ! உனது வழி தமிழர்களின் உயர்வுக்கான வழி !.
உன்னை தினம் நினைத்து , உனது பெயர் சொல்வதால் பெருமை அடைகிறோம் ! தமிழர்களின் முன்னேத்தி ஏறு நீ !
உன் வழி நடப்போம் ! நாட்டின் ஒற்றுமைக்காக உழைப்போம். உயர்வு அடைவோம்! 
  

செவ்வாய், 5 மே, 2020

உங்களை வேண்டுகிறேன் "டாஸ் மாக் வேண்டாம்"

உங்கள் அன்பிற்குரிய காளிராஜா தங்கமணி வேண்டிக்கொள்வது : மனித குலம் ,ஒரு முக்கியமான கால கட்டத்தில் வாழும் நேரம், கொரோன நோய் தொற்று நடைபெறும் காலம் இது . மனித குலத்தின் அங்கமான தமிழ் நாட்டு சமூகம் , தன்னை கட்டுப்படுத்தி வாழ வேண்டிய தருணம் இது. இந்த சமூகம் திருவள்ளுவர் , ஒவ்வையார் வழி வந்து , நடக்கும் சமூகம். பெருந்தலைவர் காமராஜர் வழி நடத்திய சமூகம். தங்களை கட்டுப்படுத்தி , சுகாதாரமான , மகிழ்ச்சியான குடும்பங்களை உருவாக்க வேண்டியது நமது ஒவ்வொருவர் கடமையாகும்.
மது குடிப்பதனால் , உழைத்த சம்பளம் வீட்டுக்கு வந்து சேரா நிலை , நிறைய குடும்பங்களில் இருப்பதால், துயரத்தோடு வாழும் நிலை இருக்கிறது. இது மாற வேண்டும். நாம் நம்மை கட்டுப்படுத்தி , மதுவில்லா சமூகத்தை உருவாக்கி , நமது பேர பிள்ளைகள், அதற்கு பிறகு வரும் வருங்கால சந்ததியினர், நல்ல சுகாதாரத்துடன் , மகிழ்ச்சியாக , "உணவே மருந்து , மருந்தே உணவு என்ற நமது முன்னோர்கள் - சித்தர்கள் காட்டிய பாதையில்" வாழ வழி உருவாக்க வேண்டும்.
அதற்கான தருணத்தில் நாம் இப்போது இருக்கிறோம். தமிழ் நாடு சமூகத்தை வழி நடத்தி கொண்டிருக்கும் இரண்டு தமிழ் சமூகத்தின் பிள்ளைகளுக்கு , நாம் நமது விருப்பத்தை , ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டிய தருணம் இது.
ஆதலால் மது இல்லாத தமிழ் நாடு சமூகம் உருவாக்க , உங்கள் உதவியை நாடி வந்துள்ளேன்.
நீங்கள் ஒவ்வொருவரும் " டாஸ் மாக் வேண்டாம்" என்று , மதிப்பிற்குரிய நமது முதல்வர் இ பி எஸ் மற்றும் துணை முதல்வர் ஒ பி எஸ் அவர்களுக்கு, அவர்களுடைய டுவிட்டர் பக்கத்தின் மூலமாகவோ அல்லது "முதல் அமைச்சர் செல் பக்கத்தின் " மூலமாகவோ கண்டிப்பாக இன்றே தெரிவியுங்கள். உங்கள் ஆதரவு நமது வருங்கால தமிழ் நாடு தலைமுறை பிள்ளைகளின் நல் வாழ்வுக்கு வழி கோலும். தமிழ் சமூகம் , மனித குலத்தின் ,மதிப்பு மிக்க அங்கமாக அமைந்திட , உங்கள் உதவி மிகவும் அவசியம். நன்றி.