சனி, 8 ஆகஸ்ட், 2020

வெள்ளையனே வெளியேறு - ஆகஸ்ட் 8 போராட்டமும் - காமராஜரும்.

 உரிமை வேண்டி நடந்த , இந்திய விடுதலை போராட்டங்களில் இரண்டு போராட்டங்கள் மிகவும் முக்கியமானவை. ஓன்று  1930 உப்பு சத்தியாகிரக போராட்டம் , மற்றொன்று 1942 வெள்ளையனே வெளியேறு - ஆகஸ்ட் 8 போராட்டம் .
 உப்பு சத்யாகிரகத்திற்கு ,தமிழ் நாட்டு சமூகத்திற்கு தலைமை ஏற்று நடத்திய தலைவர் ராஜாஜி. ஆகஸ்ட் 8 போராட்டத்திற்கு ,தமிழ் நாட்டு சமூகத்திற்கு தலைமை ஏற்று நடத்தியவர் காமராஜர்.


காமராஜர் , உப்பு சத்தியாகிரக போராட்டத்தில்  , தொண்டராக கலந்து கொண்டு , இரண்டு ஆண்டு சிறை தண்டனை அடைந்தார். 
தமிழ் நாடு காங்கிரஸ் தலைவராக , ஆகஸ்ட் 8 போராட்டத்தை , தலைமை ஏற்று நடத்தி , மூன்றரை ஆண்டுகள் சிறையில் அடைக்க பட்டார். அந்த காலத்தில் அவர் , சிறையில் கல்லுடைக்கும் பணியை செய்தார். 


அப்படி தமிழ் நாட்டு சமூகத்தை , விடுதலை போரில் வழி  நடத்திய தலைவர் காமராஜர் , பிற்காலத்தில், தமிழ்நாட்டு முதல்வராக வழிநடத்திய காலத்தில் , முதியோர் பென்ஷனை அறிமுகப்படுத்தி, இலவச கல்வியை அறிமுக படுத்தி, மதிய உணவு திட்டத்தை பள்ளி கூடங்களில் அறிமுகபடுத்தி , வழி நடத்தினார். 
தொழில் கூடங்களை பெருக்கி ( திருச்சி பெல் ), அணை கட்டுகளை உருவாக்கி (ஆழியார் அணைக்கட்டு ), பள்ளி கூடங்களை உருவாக்கி ( ஐ ஐ டி , மெட்ராஸ் ) , தமிழ் நாட்டு சமுகத்தை , வளர்ச்சி பாதையில் வழி  நடத்தினார்.


ஆகஸ்ட் 8 , வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கெடுத்த அத்தனை விடுதலை வீரர்களையும் நினைத்து , அவர்கள் வழியில் விடுதலை காப்போம்.  அந்த போராட்டத்தின் தலைமை ஏற்று நடத்திய காமராஜர்  வழி  நடப்போம் , பாரதம் காப்போம், வெற்றி பெறுவோம். வளம் பெறுவோம்.  ஜெய் ஹிந்த். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக