புதன், 12 பிப்ரவரி, 2020

சிரியன் கிறித்துவ பெண் சூசன் இல்லியாசை சந்தித்தேன்


                                                                          
                                              முனைவர் சூசன் இல்லியாசிஸ்

 சிரியன் கிறித்தவர் சூசன் இல்லியாசிஸ் , திருப்பதி வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரிக்கு வந்த போது , அவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
சிரியன் கிறித்தவர்கள் பற்றி அவர் சொன்ன விஷயங்கள் , அரிய  செய்தியாக இருந்தது. சிரியன் கிருத்தவர்கள் மற்றவர்களை ,மத மாற்றம் செய்வதில்லை என்று சொன்னார். அவர்கள் ஒரு குடும்பத்தை போன்றவர்கள் என்றும் , மற்ற எவரும் மதம் மாறி , சிரியன் கிருத்துவர்களாக ஆக முடியாது என்று சொன்னது வியப்பாக இருந்தது.
    ஏசு கிறிஸ்துவின் நேரடி சீடரான புனித தாமஸ் அவர்கள் கேரளாவிற்கு வந்து , கி பி 52 ஆம் ஆண்டு , நான்கு நம்பூதிரி பிராமணர்களை , கிருத்துவர்களாக மாற்றி , சிரியன் கிருத்தவ சமூகத்தை உருவாக்கியதாக சொன்னார். அந்த நான்கு குடும்பத்தின் 2000 ஆண்டு தொடர் வரலாறு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக அவர் சொன்ன போது ஆச்சரியமாக இருந்தது. மாமன்னன் ராஜ ராஜ சோழன் சந்ததியர் பற்றி தமிழர்கள் கண்டுபிடிக்க திணறும் போது , மலையாள சிரியன் கிருத்துவர்கள் வரலாற்றை பேணி நிற்பது கண்டு பிரமிப்பாக இருந்தது.
   சிரியன் கிறித்தவர்கள், சிரியா நாட்டில் பழக்கத்தில்  இருந்து வரும் முறையில் வழிபாடு செய்வதாகவும் , சிரியன் மொழியை பயன் படுத்துவதாகவும் அவர் சொன்னார். எப்படி பிராமணர்கள் சமஸ்கிருதத்தில் வழிபாடு செய்கிறார்களோ, அதைப்போல இவர்களும் சிரியன் மொழியில் ஸ்லோகங்களை உபயோக படுத்துவதாக சொன்னார். சிரியன் மொழி ஏசு நாதர் பேசிய அராமைக் மொழியோடு தொடர்புடையதாக சொன்னார்.
இவருடைய குடும்பத்தின் 500 ஆண்டு , சந்ததி வரலாறு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். கொச்சி பக்கத்தில் உள்ள அடங்காபுரம் குடும்பம் , அவர்களின் குடும்பமாக சொன்னார்.
   ஆங்கிலேயருடைய காலத்தில் கல்வி கற்க , சென்னை லயோலா கல்லூரிக்கு வந்த அவருடைய மூதாதையர் , இங்கேயே தங்கி, மாநகராட்சியில் அரசாங்க வேலை செய்தார்கள். ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு போகும் போது, அவர்களிடம் இருந்து  பாரிஸ் கார்னரில் ஒரு கிருத்தவ ஆலயத்தை , 100 ஆண்டு கட்டு குத்தகைக்கு வாங்கியதாக சொன்னார். 300 ஆண்டு பழைமை வாய்ந்த அந்த ஆலயம் இன்றும் சிறப்பாக செயல்படுவதாக சொன்னார். இன்றைக்கு சிரியன் கிருத்தவர்கள் 16 ஆலயங்களை சென்னையில்  கட்டி , பரந்து விரிந்து இருப்பதாக சொன்ன அவர் , சென்னை  எம் எம் எம் மருத்துவமனை உட்பட  நிறைய பள்ளிகள், மற்றும் மருத்துவ , பொறியியல் கல்வி கூடங்களை சிறப்பாக நடத்துவதாக தெரிவித்தார்.
   தமிழ் மற்றும் மலையாளம் பேச மட்டுமே தெரியும் என்று சொல்லும் சூசன் , வீட்டில் ஆங்கிலத்தை அதிகம் உபயோகிப்பதாக சொல்கிறார்.
தமிழ் நாட்டு சமூகத்தில் ஒரு அங்கமாக இருக்கும் சிரியன் கிறித்தவரான  இந்த சூசன் இல்லியாஸ் முதுகலை முனைவர் பட்டம் படித்த பொறியியல் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தகுந்தது.    
 

திங்கள், 27 ஜனவரி, 2020

உரிமை பெற்ற தமிழ் சமூகத்தின் அடையாளம் - தமிழிசை சௌந்தரராஜன்

                                                                     


 தமிழிசை சௌந்தரராஜன் தமிழ் சமூகத்தின் நல்ல அடையாளமாக வளர்ந்து வருவது , நமது முன்னோர்கள் செய்த தவ பயனாகவே பார்க்கிறேன்.

 சிறு வயதில் பல வித விருப்பங்களுக்கு இடையே , தன்னை கட்டுப்படுத்தி ,தன் படிப்பில் கவனம் செலுத்தி வளர்வது கஷ்டமான விஷயமாகவே பார்க்கிறேன். அந்த விஷயத்தில் தன்னை சரியாக வழி நடத்தி , கல்வி கற்பதில் , தன்னை முறை படுத்தி , அவர் கல்வி கற்று , ஒரு ஆங்கில மருத்துவ படிப்பு படித்த பெண்ணாக உயர்ந்தது , மற்ற பெண்களுக்கு நம்பிக்கை தரும் செயல். அவர் வெளி நாடு சென்று உயர் மருத்துவ கல்வி கற்று , தாயகம் திரும்பி , மருத்துவ பணி ஆற்றியது , மிகுந்த மகிழ்ச்சி தரும் விஷயமாகும்.

 அவர் அரசியல் களத்தில் இறங்கி , பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக உயர்ந்து நின்ற காட்சி, நமது சமூகத்தின் வளர்ச்சியின் அடையாளமாகவே பார்க்கிறேன்.   தமிழ் சமூகத்தின் சாதாரண பெண்களும் , நல்ல அரசியல் செய்ய முடியும் என்று, கடுமையான போராட்டங்களுக்கு இடையே நிரூபித்தது , அயராமல் அரசியல் களத்தில்,  எதிர் கருத்துக்களை சந்தித்தது , ஒரு பிரமிப்பு ஊட்டும் செயலாகவே அமைந்தது . அப்படி அவர் அரசியல் களத்தில் துணிந்து நின்ற காட்சிகள், நமது மக்களிடையே , மதிப்பையும்  நம்பிக்கையையும் உருவாக்கிய செயலாகும்.
  பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக , தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் , அரசியல் களத்தில், நல்ல விமசர்னங்களையும் , கடுமையான தரம் குறைவான எதிர் விமர்சனங்களையும் ஏற்று , அவர் வலம் வந்தார் என்பது , தமிழ் குல பெண்களுக்கு நல்ல முன் மாதிரியாக விளங்கினார் என்றே சொல்வேன்.
 அவருடைய கணவரின் உதவியோடு தான் , இந்த அளவுக்கு அவர் நமது சமூகத்திற்கு பணி ஆற்ற முடிந்தது என்பதை நாம் அறியும் போது , மகிழ்ச்சி தருவதை உணர முடிகிறது.
 அவர் பாராளுமன்ற தேர்தலில் தோல்வி கண்ட போதும் , துவளாமல் , அரசியல் பணி ஆற்றிய விதம் மகிழ்ச்சி அளிப்பதாகவே அமைந்தது.
அவர் செய்த அரசியல் பணியின் மதிப்பை அறிந்த அவர் கட்சியும் , அரசாங்கமும் அவருக்கு தெலுங்கானா ஆளுநர் பதவி கொடுத்து கௌரவித்தனர்.
 இன்று அவர் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநர். ஆம் தமிழ் நாட்டை கி பி 1370 முதல் 1697  வரை ஆட்சி செய்த விஜய நகர சாம்ராஜ்யத்தின் தலைமை பகுதிதான் தெலுங்கானா மாநிலமாகும் . அதன் பிறகு 1697    முதல் 1801 வரை தமிழ் நாட்டை ஆண்ட ஆற்காடு நவாபை , ஆட்சி பொறுப்பில் அமர செய்த ஐதராபாத் நிஸாமின் தலைமை இடமான  ஐதராபாத்தில் ஆளுநராக பதவி வகிப்பது , தமிழ்  சமூகம் மிக பெரிய சுதந்திர போராட்டத்திற்கு பிறகு உரிமை பெற்ற சமூகமாக வளர்ச்சி அடைந்து இருப்பதையே காட்டுகிறது.
தமிழிசை சௌந்தரராஜன் உரிமை பெற்ற தமிழ் நாட்டு சமூகத்தின் அடையாளம்.
 உண்மையாக , உறுதியுடன்  உழைத்தால் , தமிழ் பெண்கள் , அரசியல் அதிகாரத்தின் உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்பதை நிரூபித்து காட்டிய , தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு எனது நன்றிதனை அன்போடு தெரிவிக்கிறேன்.
 அவருடைய பெற்றோர் இலக்கிய செல்வர் குமரி ஆனந்தன் அவர்களின் குடும்பத்திற்கு நன்றி தெரிவிப்பதற்கு கடமைபட்டுள்ளேன்.
 பெருந்தலைவர் காமராஜர் வழி நடக்கும் அவர்கள் குடும்பம், அரசியல் உரிமை பெற்ற  தமிழ் சமூகத்தின்  நல்ல அடையாளமாக திகழ்கிறது.
 ஒவ்வொரு தமிழ் குடும்பமும் இந்த மாதிரி உறுதியுடன்  உழைத்து , உயர் நிலையை அடைந்து , நமது தேச விடுதலைக்காக உழைத்த ,சுதந்திர போர் வீரர்களுக்கு நன்றி செலுத்துவோம் .

புதன், 30 அக்டோபர், 2019

பொறியியல் வார்த்தைகள் தமிழில் - Engineering Words in Tamil

Assessment - தேவை மதிப்பீடு 

Conceptual or High Level Design - மேல்நிலை வடிவமைப்பு
Cost Benefit Analysis - திட்ட மேலாண்மை - பயன்-உழைப்பு பகுத்தறிதல்

Deployment - செயற்படுத்தல்
Detail Design - துல்லிய வடிவமைப்பு
Documentation - ஆவணப்படுத்தல்

Engine" அல்லது "Device"  - விசைப்பொறி  


Implementation - நிறைவேற்றல்

n-type - எதிர்-வகை

Maintenance - பராமரிப்பு

p-type - நேர்-வகை

Requirements Collection and Analysis  - தேவைகளை அறிதல்

semi conductor - குறை கடத்தி 
switches - நிலை மாற்றி

Testing - பரிசோதனை
Testing - operational readiness - செயற்படுநிலை பரிசோதனை
Testing - user - பயனர் பரிசோதனை
Testing - white box - தன்னிலை பரிசோதனை
Transistor    - திரிதடையம்,  மூவாயி

Work Breakdown Schedule - பணி - காலதேவை அட்டவணை

ஞாயிறு, 27 அக்டோபர், 2019

எம் ஜி ஆருக்கு சிலை வைக்காதீர்கள்.


எம் ஜி ஆர் ரின் தனிப்படட வாழ்கை , மிகவும் சாதாரணமானது. அதை பற்றி பேச தேவை இல்லை.

அவருடைய அரசியல் வரலாறு நல்லதும் கெட்டதும்  நிறைந்தது. அவர் தனது இளமைக்கால கஷ்டமான வாழ்க்கை அனுபவத்தால், ஏழை மக்களிடத்தில் அன்பு கொண்டவராக இருந்தார்

அவர் கட்சி ஆரம்பித்தவுடன் , தி மு க அரசை நீக்குவதற்கு தவறான முறைகளை கடைபிடித்தார். ஊழல் குற்ற சாட்டுகளை டெல்லிக்கு கொண்டு சென்று , தி மு க அரசை 1975 இல் கலைக்க செய்தார்.
தி மு க வினர், 1980 இல் அதையே திரும்ப செய்து காட்டி எம் ஜி ஆர் அரசை கலைத்தனர்.
அரசியலை சுயநலத்துடன் எடுத்து சென்றவர் அவர். தமிழக ஊர்களில் தி மு க , அ தி மு க வினர் பேசாத நிலையை உண்டாக்கியவர்.

மது ஆலைகளை தமிழகத்தில் முதன் முறையாக தொடங்கி தவறு செய்தவர்.

வெந்நிறை ஆடை நிர்மலாவுக்கு எம் எல் சி பதவி கிடைக்க,  அவரிடம் லட்சக்கணக்கான ரூபாயை நேரில் கொடுத்ததால் , அவர் தண்டனை அடைய வழி  செய்த்தவர். அவருக்கு எம் எல் சி பதவி கிடைக்காததால் , மேல் சபையை கலைத்து விட்டார். அரசியல் அரசாங்க நிவாகத்தில் ஒரு தூணையே சரித்து விட்டவர். மற்ற மாநிலங்களில் மேல் சபை இருக்கிறது, ஆனால் தமிழகத்தில் இல்லை. பட்டதாரிகளின் குரல், ஆசிரியர்களின் குரல் , சட்ட சபையில் ஒலிக்க வழியில்லாமல் செய்து  விட்டவர்.

பிரபாகரனுக்கு காசு கொடுத்து ஆயுத போராட்டதை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர். ஆனால் 1987 இல் ஐ பி கே எப் (இந்திய அமைதி படை ) இலங்கையில் பிரபாகரனின்  படையுடன் சண்டையிட்ட போது , ஆயிக்கணக்கில் மக்கள் மடிந்தபோது, அதை தடுக்கும் வல்லமை இல்லாதவர்.  

தமிழர்களே , தயவு செய்து எம் ஜி ஆருக்கு சிலை வைக்காதீர்கள். கட்சி தலைமையையும் ஆட்சி தலைமையையும் தன் ஒருவரிடத்திலே வைத்து தவறான வழியை காட்டியவர்தான் அவர்.

சனி, 20 ஏப்ரல், 2019

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சுப்பிரமணிய சிவாவின் பெயரை சூட்ட வேண்டும்.

தமிழர் நிலங்களின் உரிமைகளை அவர்கள் இழப்பதுவும், அவர்கள் அடையாளங்களை இழந்து நிற்பதுவும் தமிழர் சமூகத்திற்கு நலம் சேர்க்காது, மதிப்பும் தருவது அல்ல.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு , எம் ஜி ஆர்  ரயில் நிலையம் என்று பெயர் வைப்பது , தமிழர்  அடையாளங்களை தமிழர் காக்க தவறியதாகவே ஆகும். எம் ஜி ஆர் மிக பெரிய அளவில் புகழ் பெற்ற  சினிமா நடிகர்  மற்றும் அரசியல் தலைவர். தமிழர் நிலத்தில் அவருக்கு நிறைய அடையாளங்கள் நிறுவப்பட்டு இருக்கின்றன, அவர் பெயரில் மருத்துவ பல்கலைகழகம் , கடற்கரையில் நினைவிடம் என்று.
ஆனால் தமிழ் நிலத்தின் பழமை வாய்ந்த ரயில் நிலையத்தின் பெயரை அவர் பெயரில் மாற்றுவது , தமிழர் தனது அடையாளங்களை இழந்து விட்டதாகவே ஆகும். அவருடைய தொண்டர்கள் இன்றய ஆட்சி ஆளர்களாக இருந்தாலும், இந்த பெயர் மாற்றத்தை தமிழர்களால் ஏற்க முடியாது.
அன்று இந்திரா காந்தி கட்ச தீவை, இலங்கைக்கு கொடுத்தார் , தமிழர்கள் உரிமைகள் இழந்தனர். இன்று நரேந்திர மோடி, ஓட்டுக்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை எம் ஜி ஆர் பெயரில் மாற்றி இருக்கிறார். இரண்டும் மிக பெரிய பிழைகள்.
தமிழர்கள் நடத்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு , அனைத்தையும் இழந்து நின்ற சுப்ரமணிய சிவா , வ உ சி போன்றோர் போற்ற வேண்டிய தருணத்தில் , தமிழக்கில் மது ஆலைகளை முதன் முதலாக திறந்த  எம் ஜி ஆர் பெயரை , தமிழகத்தில் மேல் சபையை கலைத்து , தமிழ் நாட்டின் அரசாங்க தூண்களில் ஒன்றை சாய்த்தவர் பெயரை, நமது சமூகத்தில் ஆசிரியர்கள் , சட்ட மேல் சபையில் பெற்றிருந்த உரிமைகளை இழக்க செய்த எம் ஜி ஆர் பெயரை , சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு  வைப்பது  தவறு.
இந்த தமிழ் நாடு சமூகத்திற்கு உழைத்த விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவின் பெயரை சூட்ட வேண்டும். இதுவே வருங்கால சமூகத்திற்கு நாம் காட்டும் நல்  வழி ஆகும். 

சனி, 8 டிசம்பர், 2018

காமராஜர் பெயர் சொல்லாத நன்றி கெட்ட பாப்பையா பட்டி மன்ற உறுப்பினர்கள்.

காமராஜர் பெயர் சொல்லாத நன்றி கெட்ட பாப்பையா பட்டி மன்ற உறுப்பினர்கள்.
நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த பாரதி விழாவில் நடைபெற்ற பாப்பையா பட்டி மன்றம் பார்த்தேன்.
தலைப்பு - இந்திய சுதந்திர போரின் வெற்றி , அகிம்சையான போராட்டத்தால் கிடைத்ததா? அல்லது தீவிரவாத போராட்டத்தால் கிடைத்ததா? என்பதே.
பேசியவர்களின் ஒரு சிலர் மட்டும் , முத்துராமலிங்க தேவர், வேலுநாச்சியார், வாஞ்சிநாதன், சுப்பிரமணிய சிவா, பாரதி போன்ற தமிழக விடுதலை வீரர்கள்   பற்றி  பேசினார்கள்,தேசிய  விடுதலை போராட்டத்தில், தமிழகத்தில் ,பங்கேற்ற  தலைவர்கள் பெயரை கூட சொல்லாமல் , பட்டி மன்றம் முடிவு பெற்றது , மிகவும் வருத்தமாக இருந்தது.
காந்திஜியின் தலைமை ஏற்று , தன் இளமை முழுவதையும் இந்திய  விடுதலை வேள்வியில் செலவு செய்த காமராஜர் பெயரை சொல்லாமல், கொடி ஏந்தி உயிர் விட்ட திருப்பூர் குமரன், உப்பு சதியாகிரகத்தை , தமிழகத்தில் தலைமை ஏற்று நடத்திய ராஜாஜி , பாராளுமன்றத்தில், சிங்கமென கர்ச்சித்த  தீரர் சத்யமூர்த்தி , ஜீவா, போன்ற எண்ணற்ற தமிழக விடுதலை வீரர்களை பற்றி சொல்லாமல் , வட இந்திய தலைவர்கள் பற்றி பேசி , நம்மை பற்றிய அறிவு நமக்கு இல்லை என்பதை  உணர்த்திய சாலமோன் பாப்பையாவையும், மற்ற பட்டி மன்ற உறுப்பினர்களையும் கடுமையாக கண்டிக்கிறேன்.
உலகிலேயே , முதல் முதலாக ஒரு கவிஞருக்கு  அரசு விழா எடுத்தது , காமராஜர் ஆட்சியில், தேசிய கவி பாரதியாருக்கு தான். பாரதி , நம் மக்களுக்கு கல்வி கிடைக்க வேண்டி நின்றான். அதை , நிறைவு செய்யும் விதமாக , நம் மக்களை படிக்க வைத்த காமராஜரை , பற்றி பேசாமல் , பாரதி விழா எப்படி நிறைவு பெறும்?