தமிழிசை சௌந்தரராஜன் தமிழ் சமூகத்தின் நல்ல அடையாளமாக வளர்ந்து வருவது , நமது முன்னோர்கள் செய்த தவ பயனாகவே பார்க்கிறேன்.
சிறு வயதில் பல வித விருப்பங்களுக்கு இடையே , தன்னை கட்டுப்படுத்தி ,தன் படிப்பில் கவனம் செலுத்தி வளர்வது கஷ்டமான விஷயமாகவே பார்க்கிறேன். அந்த விஷயத்தில் தன்னை சரியாக வழி நடத்தி , கல்வி கற்பதில் , தன்னை முறை படுத்தி , அவர் கல்வி கற்று , ஒரு ஆங்கில மருத்துவ படிப்பு படித்த பெண்ணாக உயர்ந்தது , மற்ற பெண்களுக்கு நம்பிக்கை தரும் செயல். அவர் வெளி நாடு சென்று உயர் மருத்துவ கல்வி கற்று , தாயகம் திரும்பி , மருத்துவ பணி ஆற்றியது , மிகுந்த மகிழ்ச்சி தரும் விஷயமாகும்.
அவர் அரசியல் களத்தில் இறங்கி , பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக உயர்ந்து நின்ற காட்சி, நமது சமூகத்தின் வளர்ச்சியின் அடையாளமாகவே பார்க்கிறேன். தமிழ் சமூகத்தின் சாதாரண பெண்களும் , நல்ல அரசியல் செய்ய முடியும் என்று, கடுமையான போராட்டங்களுக்கு இடையே நிரூபித்தது , அயராமல் அரசியல் களத்தில், எதிர் கருத்துக்களை சந்தித்தது , ஒரு பிரமிப்பு ஊட்டும் செயலாகவே அமைந்தது . அப்படி அவர் அரசியல் களத்தில் துணிந்து நின்ற காட்சிகள், நமது மக்களிடையே , மதிப்பையும் நம்பிக்கையையும் உருவாக்கிய செயலாகும்.
பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக , தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் , அரசியல் களத்தில், நல்ல விமசர்னங்களையும் , கடுமையான தரம் குறைவான எதிர் விமர்சனங்களையும் ஏற்று , அவர் வலம் வந்தார் என்பது , தமிழ் குல பெண்களுக்கு நல்ல முன் மாதிரியாக விளங்கினார் என்றே சொல்வேன்.
அவருடைய கணவரின் உதவியோடு தான் , இந்த அளவுக்கு அவர் நமது சமூகத்திற்கு பணி ஆற்ற முடிந்தது என்பதை நாம் அறியும் போது , மகிழ்ச்சி தருவதை உணர முடிகிறது.
அவர் பாராளுமன்ற தேர்தலில் தோல்வி கண்ட போதும் , துவளாமல் , அரசியல் பணி ஆற்றிய விதம் மகிழ்ச்சி அளிப்பதாகவே அமைந்தது.
அவர் செய்த அரசியல் பணியின் மதிப்பை அறிந்த அவர் கட்சியும் , அரசாங்கமும் அவருக்கு தெலுங்கானா ஆளுநர் பதவி கொடுத்து கௌரவித்தனர்.
இன்று அவர் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநர். ஆம் தமிழ் நாட்டை கி பி 1370 முதல் 1697 வரை ஆட்சி செய்த விஜய நகர சாம்ராஜ்யத்தின் தலைமை பகுதிதான் தெலுங்கானா மாநிலமாகும் . அதன் பிறகு 1697 முதல் 1801 வரை தமிழ் நாட்டை ஆண்ட ஆற்காடு நவாபை , ஆட்சி பொறுப்பில் அமர செய்த ஐதராபாத் நிஸாமின் தலைமை இடமான ஐதராபாத்தில் ஆளுநராக பதவி வகிப்பது , தமிழ் சமூகம் மிக பெரிய சுதந்திர போராட்டத்திற்கு பிறகு உரிமை பெற்ற சமூகமாக வளர்ச்சி அடைந்து இருப்பதையே காட்டுகிறது.
தமிழிசை சௌந்தரராஜன் உரிமை பெற்ற தமிழ் நாட்டு சமூகத்தின் அடையாளம்.
உண்மையாக , உறுதியுடன் உழைத்தால் , தமிழ் பெண்கள் , அரசியல் அதிகாரத்தின் உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்பதை நிரூபித்து காட்டிய , தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு எனது நன்றிதனை அன்போடு தெரிவிக்கிறேன்.
அவருடைய பெற்றோர் இலக்கிய செல்வர் குமரி ஆனந்தன் அவர்களின் குடும்பத்திற்கு நன்றி தெரிவிப்பதற்கு கடமைபட்டுள்ளேன்.
பெருந்தலைவர் காமராஜர் வழி நடக்கும் அவர்கள் குடும்பம், அரசியல் உரிமை பெற்ற தமிழ் சமூகத்தின் நல்ல அடையாளமாக திகழ்கிறது.
ஒவ்வொரு தமிழ் குடும்பமும் இந்த மாதிரி உறுதியுடன் உழைத்து , உயர் நிலையை அடைந்து , நமது தேச விடுதலைக்காக உழைத்த ,சுதந்திர போர் வீரர்களுக்கு நன்றி செலுத்துவோம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக