திருப்பதி திருவெங்கடமுடையான் தமிழர்கள் வணங்கும் பெரும் தெய்வம். திருப்பதி திருக்கோயில் 7ஆம் நூற்றாண்டு பல்லவர் காலம் முதல் கட்டிடமாக கட்டி வழிபடும் தலமாக இருந்து வருகிறது.
கோயில் பராமரிப்பில் சோழர்களின் பங்களிப்பு இருக்கிறது
இன்று நாம் பார்த்து வணங்கும் திருவெங்கடமுடையான் கோயில் முழுமையாக கட்டி முடிக்க பட்ட காலம், பாண்டியர்கள் சோழர்களை தோற்கடித்து பெற்ற பெரும் செல்வத்தோடு தமிழகத்தை ஆட்சி செய்த 13 ஆம் நூற்றாண்டு ஆகும்.
ராஜ ராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலை தமிழால் கட்டினான். ஆம், கோயில் சுற்றுப்புற சுவர்கள் முழுதும் தமிழால் எழுதினான்
அது போல 13 ஆம் நூற்றாண்டில், பாண்டிய மன்னர்கள் சடையவர்மன் சுந்தர பாண்டியனும் , குலசேகர பாண்டியனும் திருப்பதி திருவெங்கடமுடையான் கோவிலை முழுமையாக தமிழால் கட்டினார்கள்.
இதற்கு எடுத்துக்காட்டாக கோவிலில் உள்ள மூன்று சுற்று சுவர்கள் முழுவதும் எழுதப்பட்டிருக்கும் தமிழ் கல்வெட்டுக்களே சாட்சி.இரண்டாம் சுற்று சுவரில் உள்ளேயம் வெளியேயும் தமிழ் கல்வெட்டுகளை பார்க்க முடியும்.
வரலாற்றில் 13 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு தமிழ் அரசர்கள் ஆட்சி இழந்த பிறகு, விஜய நகர அரசர்கள் நிறைய கட்டிடங்களை, கோவிலின் உள்ளே கட்டி, கோவிலை திறம்பட நிர்வாகம் செய்தனர்.
முழுமையான திருப்பதி திருவெங்கடமுடையான் கோவிலை பாண்டியர்கள் கட்டினார்கள் என்பதற்கு, மூன்று சுற்று சுவர்கள் முழுவதும் தமிழால் எழுதியிருப்பது ஒரு சாட்சி.
இரண்டாவது சாட்சி ஒன்றும் இருக்கிறது.அது கொடிமர மண்டபத்தின் கூரை உள்புறத்தில் வரையப் பட்டிருக்கும் இரண்டு மீன்கள் சின்னமே ஆகும்.
இரண்டு மீன்கள்
பாண்டியர்களின் சின்னம் ஆகும். இந்த கொடிமர மணடபத்தின் கூரையில், மூன்று விதத்தில் ரெண்டு மீன்கள் பொறிக்க பட்டிருப்பது ஆச்சரியத்தையும்
மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
இது போன்று
ரெண்டு மீன்கள் சின்னம் திருச்சானுர் பத்மாவதி
அம்மன் கோவில் பின்பக்க சுவற்றில் பார்க்க முடியும்.
மூன்றாவது சாட்சி, குலசேகர படி என்று அழைக்கப்படும், திருவெங்கடமுடையான் தெய்வத்தின் கருவறைக்கு முன் அமைத்திருக்கும் படிக்கட்டின் பெயர் ஆகும். இந்த குலசேகர படி திருப்பதி திருமலை திருவெங்கடமுடையான் கோயில் கூரையை பொன்னால் வேய்ந்த குலசேகர பாண்டியனின் பெயரில் அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாண்டியர்கள் திருப்பதி திருவெங்கடமுடையான் கோவிலை தமிழால் கட்டினார்கள் என்பதே உண்மை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக