With Mentor Sathyamurthy S , Kamarajar K
அறுநூறு ஆண்டுகள் அடிமைப்பட்டு ,
தாழ் பட்டு நின்ற தமிழ் நாட்டு சமூகத்திற்கு
உரிமை வேண்டி , உழைத்த
பாரதி , வ ஊ சி, சுப்பிரமணிய சிவா,
ராஜாஜி , முத்துரங்க முதலியார் , முத்துராம லிங்க தேவர் , சத்தியமூர்த்தி வழி நின்ற தியாக தலைமுறையின் தலைவர் காமராஜர்!
அதனால்தான் நீர் பெருந்தலைவர் !
28 ஆண்டுகள் விடுதலை போரில் ஈடுபட்டு ,
எட்டு ஆண்டுகள் தலைமை ஏற்று ,
கடைசி கட்ட விடுதலை போரை வழிநடத்தி,
எட்டு ஆண்டுகள் சிறை பட்டு ,
உரிமைகள் என்ற பதக்கத்தை பெற்று தந்து ,
புகழாக , பெருமையாக , தன்னையே செதுக்கிய தலைவரே !
காமராஜரே !
உன் பெயர் சொல்வதால் பெருமை அடைகிறது தமிழ் நாட்டு சமூகம்!
வாழ்க உன் தலைமுறையின் புகழ்.
வாழ்க இந்திய விடுதலை வீரர்களின் புகழ்.
ஜெய் ஹிந்த் .