வெள்ளி, 14 ஜூலை, 2017

தமிழகத்தின் வாஷிங்டன் காமராஜர்

       வாஷிங்டன் , அமெரிக்கா சுதந்திர போருக்கு தலைமை ஏற்று, முன்னிற்று நடத்தியவர் ஆவார். அமெரிக்காவுக்கு சுதந்திரம் வாங்கி தந்தார். அதை போலவே , காமராஜரும் ,  1940 முதல் 1947 வரை தமிழ்  நாடு காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்று, விடுதலை போருக்கு தலைமை ஏற்று, முன்னின்று நடத்தினார்.  நாட்டு மக்களுக்கு விடுதலை பெற்று தந்தார். "ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று" என்று பாரதி பாடினார். காமராஜர் 28 ஆண்டுகள், தமிழ் நாட்டு சுதந்திரத்துக்காக போராடி. அதை  அடைந்து காட்டினார்.  
         ஜார்ஜ் வாஷிங்டன் , அதன் பின்பு ,அமெரிக்க அதிபராகி,  அரசு நிர்வாகத்தின் தலைவராக , பொறுப்பேற்று , அமெரிக்காவை கட்டி எழுப்பினார். அதைப்போலவே காமராஜரும் தமிழ் நாட்டு முதலமைச்சர் பதவி ஏற்று , அரசு நிவாகத்தின் தலைவராக பொறுப்பேற்று , தமிழ் நாட்டை கட்டி எழுப்பினார்.
ஜார்ஜ் வாஷிங்டன் , 8 ஆண்டுகள்  கழித்து, பதவி வேண்டாம் என்று விலகி விட்டார். காமராஜரும் , 91/2 ஆண்டுகள் கழித்து , பதவி வேண்டாம் என்று விலகி விட்டார். மற்றவர்கள் தலைமை பதவிக்கு வருவதற்கு வழி தந்தார்.
ஆதலால்தான் தமிழ்நாட்டின் வாஷிங்டன் காமராஜர்  ஆவார்.

       தமிழ் நாட்டு சமூகத்தின் ஒளியாக இன்றும் விளங்குகின்ற  காமராஜர் உதித்த  நாள் இன்று! , அது நம் அனைவருக்கும் என்றும் இனிய நாள்.!

 வாழ்க! பெருந்தலைவர், நமது பெருமைக்குரிய தலைவர் காமராஜர் புகழ்!  
          அவர் வழியில் நாமும் தொடர்ந்து உழைப்போம்!.

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக