வெள்ளி, 13 அக்டோபர், 2017

காமராஜரின் வாழ்வில் முக்கிய நாட்களும், நிகழ்வுகளும்.


அறுநூறு ஆண்டுகள்,  தமிழ் நாடு அடிமை பட்டு ,இருந்த  நிலை மாற,நடந்த    விடுதலை   போராட்டத்தை , 8 ஆண்டுகள் தலைமை ஏற்று நடத்தி, வெற்றி கண்ட  காமராஜர் வாழ்வில் , தொடர்புடைய  முக்கிய தேதிகள்.
15/7/1903 ----- காமராஜர் பிறந்த நாள்
15/7/1947 ----- இங்க்லாந்து பாராளுமன்றம், இந்தியாவுக்கு விடுதலை
                        சட்டத்தை , நிறைவேற்றிய நாள்.

13/4/1919 -- தமிழ் புத்தாண்டு தினம், ஜாலியன் வாலாபாக் படு  கொலை
                     நிகழ்ந்த  நாள், காமராஜர் விடுதலை போரில் தீவிரமாக ஈடுபட
                     செய்த நிகழ்வு நடந்த நாள்.
13/4/1954  ---- தமிழ் புத்தாண்டு நாள்,
                        காமராஜர் தமிழ் நாடு முதல்வராக பதவி  ஏற்ற நாள்
                     
13/4/1957 --- தமிழ் புத்தாண்டு நாள் , காமராஜர் தமிழ் நாடு முதல்வராக
                      இரண்டாவது முறை  பதவி ஏற்ற நாள்

2/10/1869 ---- மகாத்மா காந்திஜி பிறந்த நாள்.,
                       காமராஜர் பின்பற்றிய தலைவர் பிறந்த நாள் , ஊரெல்லாம்
\                       காந்திஜி பெயரையே சொல்லி வந்தார்.

2/10/1962 ----- காமராஜர் தலைமையில் ,ஆழியாறு அணைக்கட்டு
                        திறக்க பட்ட நாள்
2/10/1904.--- காமராஜர்  இந்தியாவின் இரண்டாவது பிரதமராக
                      அடையாளம்  காட்டிய லால் பகதூர் சாஸ்திரி பிறந்த
                      நாள் ,
2/10/1963 ----- காமராஜர்  முதல்வர் பதவியை துறந்த நாள்
2/10/1975 ----- காமராஜர் மறைந்த நாள் 

ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

ஏன் தோற்கடித்தாய் தமிழகமே?

ஏன் தோற்கடித்தாய்  தமிழகமே?
பெருந்தமிழர் காமராஜரை ஏன் தோற்கடித்தாய்  தமிழகமே? ஏன் தோற்கடித்தாய்?
தன் தாய்க்கு கூட அதிகம் செலவு செய்யாத முதல்வராக இருந்த மைந்தனை ஏன் தோற்கடித்தாய்  தமிழகமே? ஏன் தோற்கடித்தாய்?

தாய் நாடு அடிமைப்பட்டு கிடப்பது கண்டு , 17 வயதிலேயே ,வெள்ளையரை எதித்து நின்ற வீரனை ஏன் தோற்கடித்தாய்  தமிழகமே? ஏன் தோற்கடித்தாய்?

தாய் நாடு விடுதலை வேண்டி 8 ஆண்டுகள் வென் சிறையில் வாடிய
விடுதலை வீரரை ஏன் தோற்கடித்தாய்  தமிழகமே? ஏன் தோற்கடித்தாய்?

விடுதலை போராட்டத்தை 8 ஆண்டுகள் தலைமை ஏற்று நடத்திய  தலைவரை   ஏன் தோற்கடித்தாய்  தமிழகமே? ஏன் தோற்கடித்தாய்?

தமிழ் நாட்டு சமூகத்துக்கு , உரிமைகள் என்ற கோப்பையை வென்று தந்த தனயனை ஏன் தோற்கடித்தாய்  தமிழகமே? ஏன் தோற்கடித்தாய்?

அறுநூறு ஆண்டுகளாக, ஆண்டு வந்தவர்கள் தமிழ் மொழி வழி ஆளாதபோது, தமிழை ஆட்சி மொழியாக்கி, தமிழை அரியணை ஏற்றிய தலைவரை  ஏன் தோற்கடித்தாய்  தமிழகமே? ஏன் தோற்கடித்தாய்?

அனைவரும் கல்வி அறிவு பெற வேண்டி , இலவச கல்வி தந்த வள்ளலை   ஏன் தோற்கடித்தாய்  தமிழகமே? ஏன் தோற்கடித்தாய்?

ஆசிரியர் ஓய்வூதியம், முதியோர் ஓய்வூதியம் தந்த தலைவரை ஏன் தோற்கடித்தாய்  தமிழகமே? ஏன் தோற்கடித்தாய்?

பதவி மட்டுமே பெரியது இல்லை, என்று சொல்லி முதல்வர் பதவியை துறந்த, வீரரை  ஏன் தோற்கடித்தாய்  தமிழகமே? ஏன் தோற்கடித்தாய்?

அகில இந்தியாவுக்கே தலைவராகி , இரண்டு இந்திய  பிரதமர்களை உருவாக்கிய, தமிழக தலைவரை ஏன் தோற்கடித்தாய்  தமிழகமே? ஏன் தோற்கடித்தாய்?

யுத்தம் வந்தபோது போர் முனைக்கே சென்று, ராணுவ வீரர்களுக்கு துணை நின்ற வீரரை ஏன் தோற்கடித்தாய்  தமிழகமே? ஏன் தோற்கடித்தாய்?

எந்த தமிழக தலைவரும் பெற்றிராத, பெருமை தன்னை பெற்று , அகில உலகமே பாராட்டிய தருணத்தில், ஏன் தோற்கடித்தாய்  தமிழகமே? ஏன் தோற்கடித்தாய்

என்ன குறை செய்தார் என்று சொல்லாமலேயேஏன் தோற்கடித்தாய்  தமிழகமே? ஏன் தோற்கடித்தாய்?.

தமிழர்களுக்கு பெருமை சேர்த்த பெருந் தலைவரை ஏன் தோற்கடித்தாய்  தமிழகமே? ஏன் தோற்கடித்தாய்?

நன்றி உள்ள தமிழகம் என்று பறை சாற்ற வழியின்றி, ஏன் தோற்கடித்தாய்  தமிழகமே? ஏன் தோற்கடித்தாய்?

அவரை அன்று  தோற்கடித்து இன்றும் எங்களை அழவைத்த, 1967 தமிழகமே, ஏன் தோற்கடித்தாய்  தமிழகமே? ஏன் தோற்கடித்தாய்?

வெள்ளி, 14 ஜூலை, 2017

தமிழகத்தின் வாஷிங்டன் காமராஜர்

       வாஷிங்டன் , அமெரிக்கா சுதந்திர போருக்கு தலைமை ஏற்று, முன்னிற்று நடத்தியவர் ஆவார். அமெரிக்காவுக்கு சுதந்திரம் வாங்கி தந்தார். அதை போலவே , காமராஜரும் ,  1940 முதல் 1947 வரை தமிழ்  நாடு காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்று, விடுதலை போருக்கு தலைமை ஏற்று, முன்னின்று நடத்தினார்.  நாட்டு மக்களுக்கு விடுதலை பெற்று தந்தார். "ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று" என்று பாரதி பாடினார். காமராஜர் 28 ஆண்டுகள், தமிழ் நாட்டு சுதந்திரத்துக்காக போராடி. அதை  அடைந்து காட்டினார்.  
         ஜார்ஜ் வாஷிங்டன் , அதன் பின்பு ,அமெரிக்க அதிபராகி,  அரசு நிர்வாகத்தின் தலைவராக , பொறுப்பேற்று , அமெரிக்காவை கட்டி எழுப்பினார். அதைப்போலவே காமராஜரும் தமிழ் நாட்டு முதலமைச்சர் பதவி ஏற்று , அரசு நிவாகத்தின் தலைவராக பொறுப்பேற்று , தமிழ் நாட்டை கட்டி எழுப்பினார்.
ஜார்ஜ் வாஷிங்டன் , 8 ஆண்டுகள்  கழித்து, பதவி வேண்டாம் என்று விலகி விட்டார். காமராஜரும் , 91/2 ஆண்டுகள் கழித்து , பதவி வேண்டாம் என்று விலகி விட்டார். மற்றவர்கள் தலைமை பதவிக்கு வருவதற்கு வழி தந்தார்.
ஆதலால்தான் தமிழ்நாட்டின் வாஷிங்டன் காமராஜர்  ஆவார்.

       தமிழ் நாட்டு சமூகத்தின் ஒளியாக இன்றும் விளங்குகின்ற  காமராஜர் உதித்த  நாள் இன்று! , அது நம் அனைவருக்கும் என்றும் இனிய நாள்.!

 வாழ்க! பெருந்தலைவர், நமது பெருமைக்குரிய தலைவர் காமராஜர் புகழ்!  
          அவர் வழியில் நாமும் தொடர்ந்து உழைப்போம்!.