சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்ந்து, பூமியின் நிலநடுக்கோடு தளத்தை கடப்பதை ,அறிவியல் அறிஞர்கள் ஆங்கிலத்தில் epoch என்பர்,அதாவது ஒரு காலத்தின் ஆரம்பம் என்பர்.
தமிழர்கள் ஒருபடி மேலே சென்று, சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்ந்து ,பூமியின் தமிழ் நிலத்தை கடக்கும் நாளை, பாரத நிலப்பகுதியை கடக்கும் நாளை புத்தாண்டு நாள் என்று கொண்டாடுவது ,அவர்களின் அறிவியல் சார்ந்த வாழ்வை அறிவிக்கிறது.
அன்று சூரியனும் தமிழ் நிலமும் நேர் கோட்டில் வரும் நாள்.
அதாவது தமிழ் நாட்டில், காலையில் நேர்கிழக்கில் சூரியன் தோன்றும்,மத்தியானத்தில் நமது தலைக்கு மேலே நேராக சூரியன் தோன்றும் .சாயங்காலத்தில் நேர் மேற்கில் சூரியனை பார்க்கலாம்.
பல மாதங்களுக்கு பிறகு முதன் முதலாக மழை வரும் நாள் சித்திரை ஒன்று. வருஷ பிறப்புக்கு மழை பெய்யும் என்பது கூற்று.
வருஷ பிறப்புக்கு முந்திய நாளான 13/4/2015 அன்று ,சென்னை அருகேயுள்ள திருநின்றவூர் சென்றிருந்தேன். மாலை நேரம். மழை ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்த கடைக்காரரிடம் கேட்டேன் 'இன்று தான் முதல் மழை பெய்கிறதா?' என்று. அவர் சொன்னார் 'வருஷ பிறப்புக்கு மழை பெய்யும்னு பெரியவங்க சொல்வாங்க. அதுபோல இன்று தான் முதல் மழை பெய்கிறது ' என்று.
இந்த மாதத்தில் காலை பொழுது சீக்கிரமாக தொடங்கிவிடுகிறது.சித்திரை மாதத்தின் ஆரம்பத்தில் வேப்ப மரம் பூத்து குலுங்கும்.திரு விழாக்களின் மாதம் இது.
On Date 14/04/2015 First day of Tamil month Chithirai , Tamil land is in the same plane of sun’s equatorial plane.This day is Tamil new year day. Full moon day is more bright and lengthy in this month. People organize temple festivals this month and celebrate with their relatives and are happy.
Its been very informative for tamilians, great effort for knowing tamil science & History.
பதிலளிநீக்குAll the Best
Thank you Mr.Sairam
பதிலளிநீக்குபல தவறுகள் உள்ளது . அறிவியல் படி ஏப்ரல் 10 அன்று கன்னியாகுமரியில் கடக்கும் சூரியன் ஏப்ரல் 24 அன்று சென்னையை கடக்கிறது ஏப்ரல் 14 அன்று Cumbum, Rajapalayam, Sivakasi, Virudhunagar, Paramakudi ஆகிய இடங்களை மட்டும்தான் கடக்கிறது. தமிழ் நாட்டின் சராசரி என்றால் கூட ஏப்ரல் 17 அன்று எடுத்துக்கொள்ளலாம்.
பதிலளிநீக்குபுத்தாண்டில் மழை தீபாவளி அன்று மழை என்பதெல்லாம் கட்டுக்கதை.IMD வெப்சைட் சென்று பார்த்தால் பல வருடங்களில் தமிழ் புத்தாண்டு அன்று மழை பெய்யவில்லை என தெளிவாக தெரியும்
தமிழ் வளர்த்த பாண்டிய நாட்டின் தலைநகர் பகுதியை சரியாக ஏப்ரல் 14 அன்று, தெற்கிலுருந்து வடக்கு செல்லும் சூரியன் நேர்கோட்டில் சந்திப்பதை, தமிழர் புத்தாண்டு முதல் நாள் என்று நமது முன்னோர்கள் நிலைப்படுத்தியிருப்பது , அறிவியல் அறிந்தவர்கள் அவர்கள் என்பதை நாம் அறிய செய்கிறது. இதை அறிவதற்கு பல ஆண்டுகளின் குறிப்புகளை அவர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும்..
நீக்குமற்ற தமிழ் நில பகுதிகளை ஒரு டிகிரி அல்லது இரண்டு டிகிரியில் மட்டுமே விலகி இருப்பது, நேர்கோட்டில் இருப்பதாகவே தோன்றும் நாள், அந்த நாள்.
வருஷ பிறப்பு அன்று மழை வரும் என்று பெரியவர்கள் சொல்லுவதை அவர் என்னிடம் சொன்னார். அன்று மழை பொழிந்ததாக சொன்னார். இங்கு தவறு எதுவும் இல்லை