சி என் எ என்று அன்போடு அழைக்கப்படும் தமிழக அரசியல் தலைவர் சி என் அண்ணாதுரை அவர்கள் அறிஞர் என்றும் பேரறிஞர் என்றும் அழைக்கலாமா என்றால் இல்லை என்பதே உண்மை.
அதற்கான காரணங்களை பார்ப்போம்.
1.அண்ணா துரை அவர்கள் , நமது தமிழ் நாட்டு மக்களுக்கு விடுதலை வேண்டாம் என்று 1945 திருச்சி திராவிடர் கழக மாநாட்டில்
தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியவர். தமிழ் நாடு 1311 இல் மாலிக்கபூர் படையெடுப்புக்கு பிறகு அடிமைப்பட்டு கிடந்தது. தமிழர்கள் மொஹமதியர்களால், கன்னட ,தெலுகு , மராட்டிய மக்களால், பிறகு ஐரோப்பிய மக்களாலும் ஆளப்பட்டு வந்த நிலையில் , “எங்களுக்கு விடுலை வேண்டாம் , தமிழ் மக்கள் உங்களுக்கு கீழ் ஆளபட்டு வர விரும்புகிறோம்” என்று இங்கிலாந்து
ராணிக்கு கடிதம் எழுதுகிறார் என்றால், அவர் தமிழ் மக்களின் முன்னோர் அடைந்த துயரத்தை உணர தவறியவர் என்பது முதல் காரணம். அவர் அரசியல் உரிமைகள் இல்லாத சமூத்தின் குறைபாடுகளை உணர தவறியவர் என்பதே உண்மை.
2. “அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு” என்று அவர் எழுப்பிய கோசம், வெற்று கோஷம் என்பதை உணராமல், மக்களிடம் வேற்றுமைகளை விதைப்பதில் அவர் காட்டிய தவறான ஆர்வம். “வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது” போன்ற பிரிவினை கோஷங்களை எழுப்பி மக்களின் உணர்வுகளை தூண்டியவர். 14 ஆண்டுகளை இப்படி மக்களை தவறாக தூண்டியவர் , 1962 இல் சீனா நம்மை தாக்கியபோது, அதை விட்டதாக அறிவித்தவர். “பிரிவினை பேசுபவர்கள் தேர்தலில் நிற்க முடியாது “ என்ற சட்டம் வந்தவுடன், மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்று திருத்தியவர்.
3. 1967 தேர்தலில் தமிழ் தேசிய கட்சி தலைவர் மா பொ சிவஞானமுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தார். வெற்றி பெற்ற பின்பு மா பொ சி மந்திரி பதவி கேட்டபோது, பெரியார் உங்களுக்கு மந்திரி பதவி தர கூடாது என்று சொல்லிவிட்டார் , ஆதலால் பெரியாரை சமாதான படுத்துங்கள் என்று கூறிவிட்டார். பெரியாரிடம் கேட்டா அவரை கூட்டணியில் சேர்த்தார். இல்லையே!. அப்படி இருக்க இப்போது மட்டும் பெரியார் பேச்சை கேட்டது தவறு அல்லவா. “மூன்று திராவிட ஒழிப்பு மாநாடுகள் நடத்தி இருந்த மா பொ சி பெரியாடிடம் செல்லவில்லை. அதனால் பதவியும் கிடைக்க வில்லை.
4. செய்ய முடியாத திட்டங்களை அறிவித்து எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்துடன் செயல் ஆற்றியது. ஒரு ரூபாயிக்கு மூன்று படி அரிசி என்று அன்று அவர் எழுப்பிய கோசத்தை அவரால் முழுமையாக செயல் படுத்த முடியவில்லை. அன்று அவர் விவசாயிகளின் பயிரின் விலை நிர்ணயம் பற்றி மறந்த செயலும் கருத்தில் கொள்ளத்தக்கது.
5. அரசாங்கத்துக்கு நிதி வேண்டும் என்று, “விழுந்தால் வீட்டுக்கு விழாவிட்டால் நாட்டுக்கு” என்ற கோஷத்தை எழுப்பி லாட்டரி சீட்டை தமிழ் நாட்டில் அறிமுக படுத்தினார். பின்னாளில் லாட்டரியால் பல்லாயிர குடும்பங்கள் அடைந்த துயரங்களை கண்டு , முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்கள் லாட்டரியை தடை செய்தார்.
6. தேர்தல் முடிந்தவுடன் மந்திரி பதவிகளுக்கான தேர்ந்தெடுப்பதில் , அன்றைய நாம் தமிழர் கட்சி தலைவர் சி பா ஆதித்தனாரையும் சேர்த்து எழுதி கொண்டு எம் ஜி ஆரிடம் ஆலோசனை கேட்டபோது , எம் ஜி ஆர் சி பா ஆதித்தனாரை மந்திரி பதவிக்கு நிராகரித்தார் , அதை அண்ணாவும் ஏற்று கொண்டார் என்பது அண்ணாவின் முடிவெடுக்கும் ஆற்றல் சிறப்பானதாக இல்லை என்பதை தெரிவிக்கிறது.
6. அன்றைய பாரதத்தின் பிரதமர் ஜவகர்லால் நேரு , இலங்கை பிரதமர் ஸ்ரீமதி பண்டார நாயக்காவை சந்தித்து பேசியபோது அவர் ” தம்பி, நேருவோ மனைவியை இழந்தவர் , பண்டாரநாயகாவோ கணவரை இழந்தவர் , இவர்கள் தனி அறையில் சந்தித்து பேசினார்கள் என்றால், அவர்கள் ஏன்ன பேசி இருப்பார்கள் என்பதை நீயே முடிவு செய்துகொள்” என்று எழுதி தமிழ் சமூத்தில் அரசியல் ஆதாயத்துக்காக தரம் தாழ்ந்த விமர்சனங்களை அரங்கேற்றியவர்.
7.
உங்களை பானு மதியோடு தொடர்பு படுத்தி சொல்கிறார்களே என்று கேட்டபோது, “அவரோ படிதாண்டா பத்தினியும் இல்லை நானும் முற்றும் துறந்த முனிவனும் இல்லை “ என்று அவர் பேசியது , தாம் ஒரு பெண்ணை பற்றி பொது வெளியில் பேசுகிறோம் என்று உணராதவராக அவர் செயல் பட்டது தெரிகிறது. அண்ணா வெற்றிகரமான அரசியல் தலைவர் ஆவார். அண்ணா ஒன்றும் அறிஞர் இல்லை என்பதே உண்மை.