உங்கள் அன்பிற்குரிய காளிராஜா தங்கமணி வேண்டிக்கொள்வது : மனித குலம் ,ஒரு முக்கியமான கால கட்டத்தில் வாழும் நேரம், கொரோன நோய் தொற்று நடைபெறும் காலம் இது . மனித குலத்தின் அங்கமான தமிழ் நாட்டு சமூகம் , தன்னை கட்டுப்படுத்தி வாழ வேண்டிய தருணம் இது. இந்த சமூகம் திருவள்ளுவர் , ஒவ்வையார் வழி வந்து , நடக்கும் சமூகம். பெருந்தலைவர் காமராஜர் வழி நடத்திய சமூகம். தங்களை கட்டுப்படுத்தி , சுகாதாரமான , மகிழ்ச்சியான குடும்பங்களை உருவாக்க வேண்டியது நமது ஒவ்வொருவர் கடமையாகும்.
மது குடிப்பதனால் , உழைத்த சம்பளம் வீட்டுக்கு வந்து சேரா நிலை , நிறைய குடும்பங்களில் இருப்பதால், துயரத்தோடு வாழும் நிலை இருக்கிறது. இது மாற வேண்டும். நாம் நம்மை கட்டுப்படுத்தி , மதுவில்லா சமூகத்தை உருவாக்கி , நமது பேர பிள்ளைகள், அதற்கு பிறகு வரும் வருங்கால சந்ததியினர், நல்ல சுகாதாரத்துடன் , மகிழ்ச்சியாக , "உணவே மருந்து , மருந்தே உணவு என்ற நமது முன்னோர்கள் - சித்தர்கள் காட்டிய பாதையில்" வாழ வழி உருவாக்க வேண்டும்.
அதற்கான தருணத்தில் நாம் இப்போது இருக்கிறோம். தமிழ் நாடு சமூகத்தை வழி நடத்தி கொண்டிருக்கும் இரண்டு தமிழ் சமூகத்தின் பிள்ளைகளுக்கு , நாம் நமது விருப்பத்தை , ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டிய தருணம் இது.
ஆதலால் மது இல்லாத தமிழ் நாடு சமூகம் உருவாக்க , உங்கள் உதவியை நாடி வந்துள்ளேன்.
நீங்கள் ஒவ்வொருவரும் " டாஸ் மாக் வேண்டாம்" என்று , மதிப்பிற்குரிய நமது முதல்வர் இ பி எஸ் மற்றும் துணை முதல்வர் ஒ பி எஸ் அவர்களுக்கு, அவர்களுடைய டுவிட்டர் பக்கத்தின் மூலமாகவோ அல்லது "முதல் அமைச்சர் செல் பக்கத்தின் " மூலமாகவோ கண்டிப்பாக இன்றே தெரிவியுங்கள். உங்கள் ஆதரவு நமது வருங்கால தமிழ் நாடு தலைமுறை பிள்ளைகளின் நல் வாழ்வுக்கு வழி கோலும். தமிழ் சமூகம் , மனித குலத்தின் ,மதிப்பு மிக்க அங்கமாக அமைந்திட , உங்கள் உதவி மிகவும் அவசியம். நன்றி.