தமிழர் நிலங்களின் உரிமைகளை அவர்கள் இழப்பதுவும், அவர்கள் அடையாளங்களை இழந்து நிற்பதுவும் தமிழர் சமூகத்திற்கு நலம் சேர்க்காது, மதிப்பும் தருவது அல்ல.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு , எம் ஜி ஆர் ரயில் நிலையம் என்று பெயர் வைப்பது , தமிழர் அடையாளங்களை தமிழர் காக்க தவறியதாகவே ஆகும். எம் ஜி ஆர் மிக பெரிய அளவில் புகழ் பெற்ற சினிமா நடிகர் மற்றும் அரசியல் தலைவர். தமிழர் நிலத்தில் அவருக்கு நிறைய அடையாளங்கள் நிறுவப்பட்டு இருக்கின்றன, அவர் பெயரில் மருத்துவ பல்கலைகழகம் , கடற்கரையில் நினைவிடம் என்று.
ஆனால் தமிழ் நிலத்தின் பழமை வாய்ந்த ரயில் நிலையத்தின் பெயரை அவர் பெயரில் மாற்றுவது , தமிழர் தனது அடையாளங்களை இழந்து விட்டதாகவே ஆகும். அவருடைய தொண்டர்கள் இன்றய ஆட்சி ஆளர்களாக இருந்தாலும், இந்த பெயர் மாற்றத்தை தமிழர்களால் ஏற்க முடியாது.
அன்று இந்திரா காந்தி கட்ச தீவை, இலங்கைக்கு கொடுத்தார் , தமிழர்கள் உரிமைகள் இழந்தனர். இன்று நரேந்திர மோடி, ஓட்டுக்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை எம் ஜி ஆர் பெயரில் மாற்றி இருக்கிறார். இரண்டும் மிக பெரிய பிழைகள்.
தமிழர்கள் நடத்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு , அனைத்தையும் இழந்து நின்ற சுப்ரமணிய சிவா , வ உ சி போன்றோர் போற்ற வேண்டிய தருணத்தில் , தமிழக்கில் மது ஆலைகளை முதன் முதலாக திறந்த எம் ஜி ஆர் பெயரை , தமிழகத்தில் மேல் சபையை கலைத்து , தமிழ் நாட்டின் அரசாங்க தூண்களில் ஒன்றை சாய்த்தவர் பெயரை, நமது சமூகத்தில் ஆசிரியர்கள் , சட்ட மேல் சபையில் பெற்றிருந்த உரிமைகளை இழக்க செய்த எம் ஜி ஆர் பெயரை , சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு வைப்பது தவறு.
இந்த தமிழ் நாடு சமூகத்திற்கு உழைத்த விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவின் பெயரை சூட்ட வேண்டும். இதுவே வருங்கால சமூகத்திற்கு நாம் காட்டும் நல் வழி ஆகும்.