புதன், 30 அக்டோபர், 2019

பொறியியல் வார்த்தைகள் தமிழில் - Engineering Words in Tamil

Assessment - தேவை மதிப்பீடு 

Conceptual or High Level Design - மேல்நிலை வடிவமைப்பு
Cost Benefit Analysis - திட்ட மேலாண்மை - பயன்-உழைப்பு பகுத்தறிதல்

Deployment - செயற்படுத்தல்
Detail Design - துல்லிய வடிவமைப்பு
Documentation - ஆவணப்படுத்தல்

Engine" அல்லது "Device"  - விசைப்பொறி  


Implementation - நிறைவேற்றல்

n-type - எதிர்-வகை

Maintenance - பராமரிப்பு

p-type - நேர்-வகை

Requirements Collection and Analysis  - தேவைகளை அறிதல்

semi conductor - குறை கடத்தி 
switches - நிலை மாற்றி

Testing - பரிசோதனை
Testing - operational readiness - செயற்படுநிலை பரிசோதனை
Testing - user - பயனர் பரிசோதனை
Testing - white box - தன்னிலை பரிசோதனை
Transistor    - திரிதடையம்,  மூவாயி

Work Breakdown Schedule - பணி - காலதேவை அட்டவணை

ஞாயிறு, 27 அக்டோபர், 2019

எம் ஜி ஆருக்கு சிலை வைக்காதீர்கள்.


எம் ஜி ஆர் ரின் தனிப்படட வாழ்கை , மிகவும் சாதாரணமானது. அதை பற்றி பேச தேவை இல்லை.

அவருடைய அரசியல் வரலாறு நல்லதும் கெட்டதும்  நிறைந்தது. அவர் தனது இளமைக்கால கஷ்டமான வாழ்க்கை அனுபவத்தால், ஏழை மக்களிடத்தில் அன்பு கொண்டவராக இருந்தார்

அவர் கட்சி ஆரம்பித்தவுடன் , தி மு க அரசை நீக்குவதற்கு தவறான முறைகளை கடைபிடித்தார். ஊழல் குற்ற சாட்டுகளை டெல்லிக்கு கொண்டு சென்று , தி மு க அரசை 1975 இல் கலைக்க செய்தார்.
தி மு க வினர், 1980 இல் அதையே திரும்ப செய்து காட்டி எம் ஜி ஆர் அரசை கலைத்தனர்.
அரசியலை சுயநலத்துடன் எடுத்து சென்றவர் அவர். தமிழக ஊர்களில் தி மு க , அ தி மு க வினர் பேசாத நிலையை உண்டாக்கியவர்.

மது ஆலைகளை தமிழகத்தில் முதன் முறையாக தொடங்கி தவறு செய்தவர்.

வெந்நிறை ஆடை நிர்மலாவுக்கு எம் எல் சி பதவி கிடைக்க,  அவரிடம் லட்சக்கணக்கான ரூபாயை நேரில் கொடுத்ததால் , அவர் தண்டனை அடைய வழி  செய்த்தவர். அவருக்கு எம் எல் சி பதவி கிடைக்காததால் , மேல் சபையை கலைத்து விட்டார். அரசியல் அரசாங்க நிவாகத்தில் ஒரு தூணையே சரித்து விட்டவர். மற்ற மாநிலங்களில் மேல் சபை இருக்கிறது, ஆனால் தமிழகத்தில் இல்லை. பட்டதாரிகளின் குரல், ஆசிரியர்களின் குரல் , சட்ட சபையில் ஒலிக்க வழியில்லாமல் செய்து  விட்டவர்.

பிரபாகரனுக்கு காசு கொடுத்து ஆயுத போராட்டதை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர். ஆனால் 1987 இல் ஐ பி கே எப் (இந்திய அமைதி படை ) இலங்கையில் பிரபாகரனின்  படையுடன் சண்டையிட்ட போது , ஆயிக்கணக்கில் மக்கள் மடிந்தபோது, அதை தடுக்கும் வல்லமை இல்லாதவர்.  

தமிழர்களே , தயவு செய்து எம் ஜி ஆருக்கு சிலை வைக்காதீர்கள். கட்சி தலைமையையும் ஆட்சி தலைமையையும் தன் ஒருவரிடத்திலே வைத்து தவறான வழியை காட்டியவர்தான் அவர்.

சனி, 20 ஏப்ரல், 2019

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சுப்பிரமணிய சிவாவின் பெயரை சூட்ட வேண்டும்.

தமிழர் நிலங்களின் உரிமைகளை அவர்கள் இழப்பதுவும், அவர்கள் அடையாளங்களை இழந்து நிற்பதுவும் தமிழர் சமூகத்திற்கு நலம் சேர்க்காது, மதிப்பும் தருவது அல்ல.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு , எம் ஜி ஆர்  ரயில் நிலையம் என்று பெயர் வைப்பது , தமிழர்  அடையாளங்களை தமிழர் காக்க தவறியதாகவே ஆகும். எம் ஜி ஆர் மிக பெரிய அளவில் புகழ் பெற்ற  சினிமா நடிகர்  மற்றும் அரசியல் தலைவர். தமிழர் நிலத்தில் அவருக்கு நிறைய அடையாளங்கள் நிறுவப்பட்டு இருக்கின்றன, அவர் பெயரில் மருத்துவ பல்கலைகழகம் , கடற்கரையில் நினைவிடம் என்று.
ஆனால் தமிழ் நிலத்தின் பழமை வாய்ந்த ரயில் நிலையத்தின் பெயரை அவர் பெயரில் மாற்றுவது , தமிழர் தனது அடையாளங்களை இழந்து விட்டதாகவே ஆகும். அவருடைய தொண்டர்கள் இன்றய ஆட்சி ஆளர்களாக இருந்தாலும், இந்த பெயர் மாற்றத்தை தமிழர்களால் ஏற்க முடியாது.
அன்று இந்திரா காந்தி கட்ச தீவை, இலங்கைக்கு கொடுத்தார் , தமிழர்கள் உரிமைகள் இழந்தனர். இன்று நரேந்திர மோடி, ஓட்டுக்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை எம் ஜி ஆர் பெயரில் மாற்றி இருக்கிறார். இரண்டும் மிக பெரிய பிழைகள்.
தமிழர்கள் நடத்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு , அனைத்தையும் இழந்து நின்ற சுப்ரமணிய சிவா , வ உ சி போன்றோர் போற்ற வேண்டிய தருணத்தில் , தமிழக்கில் மது ஆலைகளை முதன் முதலாக திறந்த  எம் ஜி ஆர் பெயரை , தமிழகத்தில் மேல் சபையை கலைத்து , தமிழ் நாட்டின் அரசாங்க தூண்களில் ஒன்றை சாய்த்தவர் பெயரை, நமது சமூகத்தில் ஆசிரியர்கள் , சட்ட மேல் சபையில் பெற்றிருந்த உரிமைகளை இழக்க செய்த எம் ஜி ஆர் பெயரை , சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு  வைப்பது  தவறு.
இந்த தமிழ் நாடு சமூகத்திற்கு உழைத்த விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவின் பெயரை சூட்ட வேண்டும். இதுவே வருங்கால சமூகத்திற்கு நாம் காட்டும் நல்  வழி ஆகும்.