காமராஜர் பெயர் சொல்லாத நன்றி கெட்ட பாப்பையா பட்டி மன்ற உறுப்பினர்கள்.
நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த பாரதி விழாவில் நடைபெற்ற பாப்பையா பட்டி மன்றம் பார்த்தேன்.
தலைப்பு - இந்திய சுதந்திர போரின் வெற்றி , அகிம்சையான போராட்டத்தால் கிடைத்ததா? அல்லது தீவிரவாத போராட்டத்தால் கிடைத்ததா? என்பதே.
பேசியவர்களின் ஒரு சிலர் மட்டும் , முத்துராமலிங்க தேவர், வேலுநாச்சியார், வாஞ்சிநாதன், சுப்பிரமணிய சிவா, பாரதி போன்ற தமிழக விடுதலை வீரர்கள் பற்றி பேசினார்கள்,தேசிய விடுதலை போராட்டத்தில், தமிழகத்தில் ,பங்கேற்ற தலைவர்கள் பெயரை கூட சொல்லாமல் , பட்டி மன்றம் முடிவு பெற்றது , மிகவும் வருத்தமாக இருந்தது.
காந்திஜியின் தலைமை ஏற்று , தன் இளமை முழுவதையும் இந்திய விடுதலை வேள்வியில் செலவு செய்த காமராஜர் பெயரை சொல்லாமல், கொடி ஏந்தி உயிர் விட்ட திருப்பூர் குமரன், உப்பு சதியாகிரகத்தை , தமிழகத்தில் தலைமை ஏற்று நடத்திய ராஜாஜி , பாராளுமன்றத்தில், சிங்கமென கர்ச்சித்த தீரர் சத்யமூர்த்தி , ஜீவா, போன்ற எண்ணற்ற தமிழக விடுதலை வீரர்களை பற்றி சொல்லாமல் , வட இந்திய தலைவர்கள் பற்றி பேசி , நம்மை பற்றிய அறிவு நமக்கு இல்லை என்பதை உணர்த்திய சாலமோன் பாப்பையாவையும், மற்ற பட்டி மன்ற உறுப்பினர்களையும் கடுமையாக கண்டிக்கிறேன்.
உலகிலேயே , முதல் முதலாக ஒரு கவிஞருக்கு அரசு விழா எடுத்தது , காமராஜர் ஆட்சியில், தேசிய கவி பாரதியாருக்கு தான். பாரதி , நம் மக்களுக்கு கல்வி கிடைக்க வேண்டி நின்றான். அதை , நிறைவு செய்யும் விதமாக , நம் மக்களை படிக்க வைத்த காமராஜரை , பற்றி பேசாமல் , பாரதி விழா எப்படி நிறைவு பெறும்?