சனி, 9 ஜூலை, 2016

காமராஜ் என்னும் விவசாயி

ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தார்.அவர் பண் படாத , தண்ணீர் வசதி இல்லாத இடத்தை பண் படுத்த முடிவு செய்து உழைத்து வந்தார். ஒரு ஆண்டு அல்ல , இரண்டு ஆண்டு அல்ல, இருபத்து எட்டு ஆண்டுகள் உழைத்தார்.அவர் தை மட்டுமே செய்தார்.
நிலம் பண்பட்டது , ஊர்காரர்களிடம் அனுமதி பெற்று பயிர் செய்யும் உரிமை பெற்றார். முதல் முறை பயிர் செய்தார் , இரண்டாம் முறை பயிர் செய்தார் விளைச்சலால் வந்த வருமானத்தை, தனது குறைவான செலவு போக ஊருக்கே கொடுத்து வந்தார்.
மூன்றாம் முறை பயிர் செய்யும் உரிமை கேட்டார் , அப்போது மற்றவர்களும் கேட்டார்கள், ஊர்க்காரர்கள் இவரிடமே கொடுத்தனர். இவர் பயிர் செய்து , தனது குறைவான செலவு போக , மீதி வருமானம் அனைத்தையும் ஊருக்கே கொடுத்தார்.
நான்காம் முறை பயிர் செய்யும் உரிமை கேட்டார், ஆனால் ஊரார் , பயிர் செய்யும் உரிமையை ,அவருக்கு தர மறுத்து , மற்றவர்களுக்கு கொடுத்தனர்.
மற்றவர்கள் பயிர் செய்ய ஆரம்பித்தனர். நெல்லோடு சேர்த்து, முற் செடிகளையும் வளர்க்க ஆரம்பித்தனர் , அந்த விவசாயி கோபம் கொண்டு துடித்தார், புலம்பினார்.  அவர்கள் நெற்பயிரோடு களைகளையும் சேர்த்து வளர்க்க ஆரம்பித்தனர். பின்பு போதை செடிகளையும் வளர்க்க ஆரம்பித்தனர். இதை பார்த்த அந்த விவசாயி , தான் கஷ்டப்பட்டு பண் படுத்திய நிலம் தவறாக பயன்படுத்த படுகிறதே என்று எண்ணி   "போச்சே!,போச்சே!" என்று புலம்பினார் , அழுதார் . துடிதுடித்தார். அந்த துயரத்தில் வருத்தத்தோடு இறந்து விட்டார்.

அந்த விவசாயிதான் காமராஜ் என்னும் விவசாயி!

நாட்டின் சுதந்திரத்துக்காக 28 ஆண்டுகள் , வேறு எந்த வேலையும் செய்யாமல் , மக்கள் உரிமைகள் பெற வேண்டி உழைத்து வந்தார். மக்கள் உரிமைகள் பெற்றனர்.
ஆட்சி செய்யும் உரிமை கேட்டார், மக்கள் கொடுத்தனர், சிறப்பாக ஆட்சி செய்தார். இரண்டாம் முறை ஆட்சி செய்யும் உரிமை கேட்டார் , ஊரார் அனுமதித்தனர், நல்ல முறையில் ஆட்சி செய்து, ஊராருக்கு நன்மைகள் செய்தார். மூன்றாம் முறை ஆட்சி செய்யும் உரிமை கேட்டார், மற்றவர்களும் கேட்டனர், ஊரார் இவரிடமே ஆட்சி செய்யும் உரிமையை  வழங்கினர்.பல சிரமங்களை மற்றவர்கள் உருவாக்கினர், ஆனாலும் நல்ல ஆட்சி நடைபெற செய்தார்.
நான்காம் முறை ஆட்சி செய்யும் உரிமை கேட்டார், ஆனால் மக்கள் அண்ணா தலைமையிலான மற்றவர்களுக்கு உரிமையை வழங்கினார்.

ஐந்தாம் முறை வாய்ப்பு வந்தபோது உரிமை கோரினார் ,
 மக்கள் கருணாநிதி - இந்திரா காந்தி கூட்டணிக்கு வாய்ப்பு வழங்கினர்.

ஆனால் ஆட்சிக்கு வந்தவர்கள் சாராயம் என்னும் முற்செடியை அறிமுகம் செய்தனர் , போராடினார், அழுதார். இலஞ்சம் என்னும் களையை வளர்த்தனர். காவல் துறையில் கட்சிக்காரர்கள்  இடையூறு செய்யும் நிலை ஏற்பட்டது. அவசர கால தடை சட்டம் என்ற விஷ செடியை வளர்த்தனர்.

 தான் உழைத்து உரிமைகள் பெற்று தந்த நாட்டில் தவறான ஆட்சி நடப்பதை எண்ணி வருந்தி, 'தேசம் போச்சே!, தேசம் போச்சே!' என்று புலம்பினார், கண்ணீர் விட்டார், வருத்தத்தோடு இறந்து போனார்.


ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை உதிக்கும் அதிசய மனிதர்.. காமராஜர் .

தமிழ் நாட்டு சமூகம் 600 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மொழி பேசாதவர்களால் ஆளப்பட்டு வந்தது.
1311 ஆம் ஆண்டு நடந்த மாலிக்கபூர் படையெடுப்புக்கு பின்பு, தமிழகம்   சிதறடிக்க பட்டு தடுமாறி  கொண்டிருந்தது. 1323 ஆம் ஆண்டு முகமது பின் துக்ளக் நடத்திய படையெடுப்புக்கு பிறகு, துருக்கி மொழி பேசும் மதுரை சுல்த்தான்களின் ஆட்சி சுமார் 50 ஆண்டு காலம் நடை பெற்றது.
1370 களில் விஜய நகர இளவரசர் வீர குமார கம்பண்ணாவின் படை , மதுரை சுல்த்தான்களை தோற்கடித்த பின்பு, தமிழகத்தில்  கன்னடம் பேசும் கம்பண்ணாவின் ஆட்சி நடைபெற்றது.
1500 களில்  தெலுங்கு பேசும் நாயக்கர்கள்   தமிழ் நாட்டை ஆட்சி செய்தனர் .
17 ஆம் நூற்றாண்டில் உருது மொழி பேசும் மொஹலாயர் ஆட்சி நடைபெற்றது .
19 மற்றும் 20ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சி  நடைபெற்றது.

இப்படிப்பட்ட காலகட்டத்தில் , சுதந்திர போராட்டத்த்தில் ஈடுபட்டு , 28 ஆண்டுகள் விடுதலைக்காக உழைத்து , தமிழக விடுதலை போரின் கடைசி கட்டத்தில் 8 ஆண்டுகள் சுதந்திர போராட்டத்தை தலைமையேற்று  நடத்தி , விடுதலை வாங்கி தந்தவர் காமராஜர் ஆவார்.
பின்பு முதல்வரான பின்பு , 1956 ஆம் ஆண்டு தமிழை ஆட்சி மொழியாக்கி , தமிழுக்கு உரிமை வாங்கி தந்தவர் காமராஜர் ஆவார்.
ஆதலால்தான் அவர் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை உதிக்கும் அதிசய மனிதர். காலம் தமிழ் நாட்டுக்கு தந்த கொடை. அவர், அவர் தான் பெருந்தலைவர் காமராஜர்.

Please see that how people gave a great sent off to K Kamaraj : https://www.youtube.com/watch?v=y41u4GKhEIQ